இலங்கை இனப் படுகொலையும் இந்திய அரசியலும்
உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் பெற்றுவிட்டனவா என்னும் பொதுப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம். அரசியல், பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய உலக அரசியல் ஒழுங்கைத் தோற்றுவிக்க முயன்று வருகின்றன. உலகின் பொதுவான இயங்குதிசை வல்லரசுகளால் தலைமை தாங்கப்படும், அவற்றின் நலன்களை முன்னிறுத்தும் சக்திகளால் இயக்கப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை மக்கள் நலனை முன்னிறுத்தும், மக்களால் தலைமை தாங்கப்படும் சக்திகளால் இயக்கப்படுவதாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது.
2011இல் தெற்கு சூடானின் விடு தலையை உள்ளடக்கிய அண்மைக் காலம்வரையிலான நிகழ்வுகள் உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் இன்னும் முற்றுப் பெறாதவை என்பதை நிரூபிக்கின்றன. 1990களில் ஸ்லேவேனியா, கொசாவோ, மாசிடோனியா, உக்ரைன், ஜார்ஜியா, டிராண்டஸடிரியா, போஸ்னியா, எ