பிம்பங்கள் சொல்லும் கதை
காலச்சுவடு - கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மாதா மாதம் மதுரையில் நடத்திவரும் அற்றைத்திங்கள் நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளும் எனக்குச் சென்ற மாதம் சூழலியல் ஆய்வாளரும் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளவரும் திரைப்படக்கலை ஆய்வாளருமான தியடோர் பாஸ்கரன் கலந்துகொண்ட நிகழ்வு உன்னதமான அனுபவத்தைத் தந்தது.
நிரம்பிய அரங்கின் முன் மேடையில் பாஸ்கரன் தன் வாழ்க்கைப் பதிவைச் சுருக்கமும் தெளிவுமாக முடித்துக் கொண்டு நேரடியாக சினிமா பற்றிய தனது தனிப்பொழிவைத் தொடங்கினார். பல வருட காலக் கண்டறிதலும் நிராசைகளும் கலந்ததொரு குரலில் அவர் “தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை பாடல்களின் ஆதிக்கம் பெருமளவு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். திரைப்படத்தில் பிம்பங்களின் மூலம் கதை சொல்லல் அவசியமாகிறது. ஆனால் பெருவாரியான படங்களில் பாத்திரங்களின் பேச்சு மூலமாகவே