ஒரு வட்டத்திற்குள் சுழலும் பல கதைகள்
நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேனா நீ என்னை வரவழைத்திருக்கிறாயா? இப்போதும்கூட இக்கேள்வியின் புதிர் அவிழ்க்க முடியாத முடிச்சைப் போலிருக்கிறது. உன்னருகில் நிற்பதும் உனது வீட்டு வாசற்கதவை உரிமைப்பட்டவனைப் போலத் திறந்து வருவதும் வெளியேறுவதும் எதன் பொருட்டு? எந்தப் புதிரின் சூட்சுமம் எனத் தெரியவில்லை. கேள்விகள் தாம் எத்தனை விதமானவையாக இருக்கின்றன. நமக்கான பதில்கள் யாவையும் ஒன்று தானே? உனது நொம்பலத்தின் புரிதலற்றவனாக வாசற்கதவை மூடி வந்திருப்பதாக நீ நினைத்துக்கொண்டிருக்¢கிறாயா? நூறு பேரின் கண்கள் உன்னைத் தொடர்வதுபோலத்தான் என்னையும் துரத்துகின்றன. எனது வழியாக உன்னைப் பற்றிய கேள்விகளுக்கான, ஐயங்களுக்கான பதிலை அடையவும் இல்லை. எனது வழியாக உன் இருப்பிடம் வந்தடையவும் துரத்துகின்றன. எதற்காக எனக்கு இந்த அடையாளம்? என்னை நீ நிராகரித்துப் புறந்தள்ளும்போதெல்லாம் எத்தனையெத்தனை கட்டுக் கதைகளைப் பிறப்பித்து அவிழ்த்து விட்டிருக்கிறேன். ஒரு வட்டத்திற்குள் உன்னைப் பற்றிய பல கதைகளைச் சுழலவிடுகிறேன். கதைகளும் தெருவில் நடமாடும் மனிதர்களைப் போலத் திரிகின்றன. துரதிருஷ்டவசமாக அக்கதைகள் என்னை