வஞ்சக அரசியலும் கற்பனையான விமர்சனங்களும்
நாரதர்கள், சகுனிகள், கூனிகள்
“யானை குழியில் விழும்போது தவளைகூடப் பின்னாலிருந்து ஓர் உதை கொடுக்கும்” என்றொரு பழமொழி உண்டு. இங்கே யதீந்திரா விடுதலைப் புலிகளுக்கு எதிரான தம் பங்களிப்பைச் செய்திருக்கும் நிலை அதை நினைவுபடுத்துகிறது.
கட்டுரையாளர் குறிப்பிடும் நாரதர்களைவிட ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலைமையிலான சகுனிகள் நிறையவே உள்ளனர். ராமாயணக் கூனிக்குச் சற்றும் குறையாமல் சோனியாவின் செயல்பாடு அமைந்தது.
“எனது அவதானிப்பிற்கு உட்பட்ட வகையில் ஈழப் போராட்டம் குறித்து சுயவிமர்சனத்துடன் கூடிய அரசியல் உரையாடல்கள் எவையும் தமிழகச் சூழலில் இடம்பெற்றதற்கான சான்றுகள் மிகவும் குறைவே.”
யதீந்திராவின் இக்கூற்று அவருக்குத் தமிழகச் சூழல் குறித்த விஷய ஞானம் குறைவு என்பதையே புலப்படுத்துகிறத