‘இருவாரங்களுக்கு முன்னர் நாளிதழ்களில் இடம்பெற்ற இரண்டு செய்திகள் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன் காதலனாலும் அவருடைய நண்பர்கள் மூவராலும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் பட்டுள்ளார். வறிய நிலையிலுள்ள அவருடைய தாயார் கொடுத்த புகாரின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் இருவர் 18 வயதுகூட நிரம்பாதவர்கள். மதுரையில் தன் சொந்த மகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரை அவர் மனைவி கிரிக்கெட் மட்டையால் தாக்கிக் கொலைசெய்த நிகழ்வு இரண்டாவது செய்தி. பெண்களின் மீதான வன்முறைகள் குறித்து நாளிதழ்கள் இவற்றைவிட மோசமான செய்திகளைத் தொடர்ந்து பிரசுரித்து வருகின்றன. வட மாவட்டத்திலுள்ள சிறு நகரொன்றில் பள்ளி மாணவிகள் இருவர் தம் சக மாணவர்கள் சிலரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டதும் அதை அந்த மாணவர்களே தம் அலைபேசியில் படம் பிடித்து இணையமொன்றில் வெளியிட்டதும் அதைத் தொடர்ந்து அந்த மாணவிகளில் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதும் இரண்டு மூன்று மாதங்களுக்கு முந்தைய செய்தி. செய்தித்தாள்களில் இடம்பெறாத, இவற்றைவிடப் பய