நாணலின் கானம்
கட்டுரை
நாணலின் கானம்
உமா வரதராஜன்
ஓவியம்: மணிவண்ணன்
எஸ்.பி. பாலசுப்ரமணியம் மறைவு தமிழ்ச் சூழலில் அதிகூடிய அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. பதினாறு மொழிகளிலும் நாற்பதாயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடியவர், மாநில ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் பல உயரிய விருதுகளைப் பெற்றவர், கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பெயர் பதித்தவர், திரைப்படங்கள் சிலவற்றில் நடிகர், இசையமைப்பாளர், இரவல் குரல் கலைஞர்; இவற்றால் மாத்திரம் தோன்றியதல்ல இந்த அதிர்வலை. இதற்கு நிகரான திறமையும், ஏறத்தாழ இதேயளவு காலப்பரப்பும் துறைசார்அனுபவமும் கொண்ட எம்.எஸ். விஸ்வநாதன், டி.எம். சௌந்த