பூரணம், துளி
கவிதைகள்
பாதசாரி
பூரணம்
கொஞ்சம் மனிதன்
கொஞ்சம் மன்னன்
கொஞ்சம் வீரன்
கொஞ்சம் அறிஞன்
கொஞ்சம் விஞ்ஞானி
கொஞ்சம் கவிஞன்
கொஞ்சம் ஞானி
கொஞ்சம் கடவுள்
என்றே பூமியில்
தன்னில் எஞ்சி
முடிகிறான் மனிதன்
எஞ்சுவது எதுவுமின்றிப்
பூரணம் என்பது
இயற்கையே
இருப்பும் செயலும் எனப்
பிரிந்திரா இயற்கையே
பூரணம்.
துளி
கண்மலர்களின்
அழைப்பில்
காற்று வழி
ஒரு கருநீலத் தேனீ
அருளொளி மின்ன நாசியில்
வந்தமர்ந்தது..
உள்ளத்தாமரை
யிலிருந்து
உயிர்தேன் ஒரு துளி
அருந்திப் பறந்தது.
மின்னஞ்சல்: visumbu29@gmail.com