கருவாடு
கதை
கருவாடு
பெருமாள்முருகன்
முருகேசுவைக் கடப்பைக்கல் இரண்டு எடுப்பதற்காக அந்தக் கடைக்குக் கூட்டிப்போனார் மேஸ்திரி. அங்கே அவனைப் பார்த்தான். முதலில் அவன் ‘கருவாடு’ தானா என்று சந்தேகமாக இருந்தது. பார்த்துப் பலவருசமாகிவிட்டது. திரும்பத்திரும்ப நான்கைந்துமுறை பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டான்; அவனேதான். வயதுகூடினாலும் முக அமைப்பில் மாறுதல் இல்லை. தலைசீவல் மாறியிருந்தது. இயல்பிலேயே அவனிடம் ஒரு இறுக்கம் தெரியும். உறுதிதான். கழுத்தில் புதுச்சங்கிலி; கையில் பிரேஸ்லெட். புதிதாகக் கல்யாணமாகி இருக்கக்கூடும்.
அவனும் இவனை அதே மாதிரி பார்ப்பதுபோலத்தெரிந்தது. வேறு கடைக்குப் போய்விடலாம் என்று உடனே தோன்