வீடு திரும்புதல்
கதை
வீடு திரும்புதல்
பாலகுமார் விஜயராமன்
ஓவியம்: செல்வம்
தரைத் தளத்தில் ஒரே நேரத்தில் ஐம்பதுபேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு இருந்த உணவகம். அடுத்து ஏழு தளங்களில் இருந்த நூற்றுமுப்பது அறைகள் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில், மெரினா கடற்கரையிலிருந்து நடந்துசெல்லும் தூரத்தில் அமைந்திருந்த திருவல்லிக்கேணி பி.எல். ராமநாதன் மேன்சன் ஹவுஸ்; அது கிட்டத்தட்ட வெறிச்சோடிக் கிடந்தது. பெருந்தொற்று நோயின் காரணமாகக் கடந்த பத்துநாட்களாக உணவகங்கள், போக்குவரத்து உட்பட நகரின் ஒட்டுமொத்த இயக்கமும் நின்றுவிட்ட நிலையில், விடுதியில் தேங்கியிருந்த சொற்ப நபர்களும் ஆளுக்கொரு