இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்: வங்கதேசமும் வியட்நாமும்
கட்டுரை
இந்தியாவின் புதிய முன்மாதிரிகள்:
வங்கதேசமும் வியட்நாமும்
மு. இராமனாதன்
அக்டோபர் மூன்றாம் வாரத்தில் இந்திய ஊடகங்களில் வங்கதேசத்தின் பெயர் தொடர்ந்து இடம்பிடித்தது. முன்பெல்லாம் வங்கதேசத் தொழிலாளர்கள் இந்திய எல்லையை அத்துமீறிக் கடந்தார்கள் என்கிற ரீதியிலான செய்திகள்தான் வரும். இந்தமுறை முற்றிலும் மாறான காரணத்துக்காக வங்கதேசம் செய்திகளில் வலம்வந்தது. சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட உலகப் பொருளாதார அறிக்கைதான் இதற்குக் காரணம். நடப்பு நிதியாண்டில் வங்கதேசப் பொருளாதாரம் 3.80% வளர்ச்சி அடையும் என்று நிதியம் கணித்திருக்கிறது. இது கொரோனாக் காலம். பல நாடுகளின் வளர்ச்சி எதிர்த் திசையில் செல்கிறது. ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரமும் 4.4 விழுக்காடாகக் கீழே இறங்கவுள்ளது. இந்தியப் பொருளாதாரமோ இந்த வரம்பையும் மீறி 10.3 விழுக்காடாக