இலக்கிய வழிப்போக்கர்
அஞ்சலி: கி.அ. சச்சிதானந்தம்
இலக்கிய வழிப்போக்கர்
சுகுமாரன்
கி.அ. சச்சிதானந்தம் (1937-2020) என்ற சச்சியுடனான என்னுடைய பழக்கத்துக்கு ஏறத்தாழ நான்கு பதிற்றாண்டுகளின் நீட்சியுண்டு. இவ்வளவு நீண்டகாலப் பழக்கம் அவரிடமிருந்து வலுவான எதையும் பெற்றுத்தரும் நட்பாக ஏன் மாறவில்லை என்ற கேள்வியும் இருக்கிறது. அவரது மறைவையொட்டிய நாட்களில் இந்தக் கேள்வி திரும்ப மனதுக்குள் அலைமோதியது.
இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் சச்சி எனக்குக் காலத்தால் முந்தையவர். சி.சு. செல்லப்பா, க.நா. சுப்ரமணியம், மௌனி, சி. மணி, அசோகமித்திரன், ந. முத்துசாமி ஆகிய மூத்த இலக்கியவாதிகளுடன் தொடர்பில் இருந்தவர். அவர்களுடன் இணைந்து செயல்பட்டவர்