தலையங்கம்
ஆசிரியர் குழு

ச. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நூறு நாள்களை நிறைவு செய்திருக்கிறது. இதை முன்னிட்டு அரசின் செயல்பாடுகளைப் பற்றிய விவாதங்கள் நிகழ்கின்றன. எதிர்பார்ப்புகளும் விமர்சனங்களும் எழுந்த வண்ணம் உள்ளன. ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலிருக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கு

கடிதங்கள்

ஆகஸ்ட் இதழில் ‘இந்தியச் சிற்றிதழ்கள்’ என்னும் தலைப்பில் வரலாற்றுத் தரவுகள் இப்படியும் உண்டா என வியக்கவைத்தது. ‘கனிமக் கொள்ளை: பாழ் வாரிப் பெருங்குழி’ தலையங்கத்தைப் படிக்கப் படிக்க மனசு முழுவதும் என் ஊரைச் சுற்றிக் கழுகாய் வட்டமிட்டது. இப்படியும் பணத்தாசை பிடித்துக் கொள்ளை, கொ

எதிர்வினை
வி. முருகன்

‘அகராதி நெறிகளுக்கு இடம் இல்லாத கையடக்க அகராதி’ எனத் தலைப்பிட்டு எனது ‘Oxford Compact Tamil-Tamil-English Dictionary’ பற்றிக் காலச்சுவடு ஆகஸ்ட் இதழில் வெளியிட்டுள்ள ஏழு பக்க மதிப்புரை குறித்து: முதலாவதாக, ஆக்ஸ்ஃபோர்டு அகராதியை இ. அண்ணாமலையின் தலைமையில் உருவாக்கப்பட்ட க்ரிய

திறந்த மடல்
அருந்ததி கோஷ்; தமிழில்: ஷாலினி பிரியதர்ஷினி

  ஆண் முற்போக்குவாதிகளுக்கு, போராளிகளாகத் தோளோடு தோள் நின்று பல போராட்டக் களங்களை நாம் சந்தித்திருக்கிறோம். தந்தை மகள்களாக, உடன்பிறப்புகளாக, இணையர்களாக, காதலர்களாக, எல்லாவற்றையும்விட முக்கிய மாகக் கருத்தியல்ரீதியாக ஒருவரையொருவர் மதிக்கும் நண்பர்களாக, பல சவால்களைச் சேர்ந்து சந்தித்த தோழமைக

பத்தி இன்றும் என்றும் 5
ராமச்சந்திர குஹா; தமிழில்: மருதன்

“இந்திய வரலாற்றாசிரியர்களாகிய நாம் இதுவரை எழுத விரும்பிய வரலாறுகளையே எழுதிவந்திருக்கிறோம். நம்முடைய செயல்திட்டத்தை மட்டுமே நிறைவேற்றி வந்திருக்கிறோம். அந்த ஆடம்பரம் இப்போது மிக வேகமாக மறைந்துகொண்டிருக்கிறது.” தனது வாழ்வின் பிற்பகுதியில் அதுவரையிலான நீண்ட அறிவுலகப் பயணத்தைத் திரும்பிப்பார

கட்டுரை
க. திருநாவுக்கரசு

எந்தத் தீப்பொறி காட்டுத்தீயாக மாறும் என்பதை ஒருபோதும் கணிக்க முடியாது. அரசியல் போராட்டங்களையும் இயக்கங்களையும் பொறுத்தவரை எது மாபெரும் சக்தியாக உருவெடுக்கும், வெற்றிக்கு இட்டுச்செல்லும் என்பது பல்வேறு வெளிப்புறக் காரணிகளைப் பொறுத்தது; ஒருபோதும் கணிக்க முடியாதது. மே 15ஆம் தேதி,  உச்சநீதிம

கட்டுரை
கே.ஆர். அதியமான்

தமிழகத்தில் சமூகநீதியையும்  சமத்துவத்தையும்  நிலைநாட்ட 69% இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 30 சதவீதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 20 சதவீதமும், எஸ்.சி. பிரிவினருக்கு 19 சதவீதமும், எஸ்.டி. பிரிவினருக்கு 1 சதவீதமும் அடங்கும். இதில் பி.சி., எம்.

கட்டுரை
சேயன் இப்ராகிம்

1857ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய்க் கலகத்தின்போது முஸ்லிம்கள் கடும் ஒடுக்குமுறைக்கு ஆளாயினர். இதனால் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி அரசுமீது அவர்கள் கடும் வெறுப்பும் கோபமும் கொண்டிருந்தனர். இந்தக் காலகட்டத்தில்தான் ஆங்கிலேய அரசு லார்டு மெக்காலேயின் பரிந்துரைகளை ஏற்றுப் புதிய கல்வித் திட்டத்தை நாடெங

கவிதைகள்
வே.நி. சூர்யா

  ஓவியம்: எஸ்.இ. ஜெபா  தருணங்களின் புத்தகம் 1  நான் வாழாத வாழ்க்கைகளுக்குள்ளிருந்து வந்த கடிதம்போல அதிகாலை நிலவு. பட்டப்பகலிலும் தன்னை மறந்து ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. நான் என் ஆசிரியர்களில் ஒருவரைக் கண்டடைந்துவிட்டேன் 2 காற்றிலிருந்து ஒரு சிட்டுக்குருவி  வந

கதை
ஜவஹர். ஜி

ஓவியம்: மணிவண்ணன் விடிந்ததிலிருந்தே சூசைநாயகத்தின் வீட்டில் ஒரே காராட்டம்.1 “வயது 62 ஆகுது, இதுக்கு மேல நீங்க ஊரெடு2க்க போக வேண்டாம்பா” என்றான் மகன் சாக்ரட்டீஸ். மெர்ச்சன்ட் நேவியில் செக்கன்ட் இஞ்சினியர் வேலை பார்க்கிறான். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவன் வேலைபார்க்கிற கப்பல் சா

கட்டுரை
மலையாளத்தில்: சுனில் பி. இளையிடம், தமிழில்: சுனில் லால் மஞ்சாலுமூடு

அபனீந்தரநாத் தாகூரின் ‘பாரத மாதா’ ஓவியம் நவீன இந்தியாவின் உருவாக்கத்தில் ‘ஜனகணமன’, ‘வந்தே மாதரம்’ ஆகிய இரண்டு பாடல்களுக்குப் பெரும் பங்கு இருந்தது. இவை இரண்டும் விடுதலைப் போராட்டப் பாடல்களாகவோ, தேசிய கீதங்களாகவோ இயற்றப்பட்டவை அல்ல. இருப்பினும், வெறும் பாடல்

அஞ்சலி: வைகறை வாணன் (1950 –2026)
பழ. அதியமான்

மூத்த பதிப்பாளர் வைகறை சென்னையில் 01.08.2026 காலமாகிவிட்டார். 15.08.1950இல் பிறந்த ‘வைகறை’ என்றே அழைக்கப்பட்ட அவரது இயற்பெயர் ஜெயபால் என்பது நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து பலரும் அறியாதது. பதிப்பாளர் என்பது அவரது ஆளுமையின் பல அம்சங்களுள் ஒன்று. அது வாழ்தொழிலாகவும் பலரையும் கவர்ந்துவிட்

பத்தி: காணச் சொல்லுகிறேன்
இரா. ரேவதி

ஓவியம்: மு. மகேஷ்  பிறைச்சந்திரன் வடிவில் இருந்த மேஜைக்குப் பின்னே கமலி மேடம் நடுவிலும் நானும் பேச்சியும் இடது வலதாக அமர்ந்திருந்தோம். முக்கியமான வேலைகளை எங்கள் மூவருக்கும் தனித்தனியாகவோ கூட்டாகவோ தருவது எங்கள் ஆட்சியரின் வழக்கம். மாவட்டத்துக்குப் பல திட்டங்களின் கீழ் வரப்பெறும் தையல்

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா

அதிகாரம் - 2 தொலைக்காட்சிகளில் காணொலித் தொகுப்புகளை மீள் ஒளிபரப்புவதுபோல் நான் 2026 ஜுலை காலச்சுவடு இதழில் எழுதியதன் சுருக்கத்தைத் தருகிறேன்: 19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில், மக்ஸ் முல்லர் போன்ற கீழைத்தேயவாதிகள் இந்தியாவில் மதமாற்றம் செய்வதற்கு, ‘தலையைச் சுற்றவைக்கும் மிரட்டலான தமிழ் எழுத

பாரதியியல்
ய. மணிகண்டன்

1922 ஏப்ரல் 26ஆம் நாள். பாரதி இறந்து ஏழு மாதங்களே ஆகியிருந்தன. எட்டாம் மாதம் நடந்துகொண்டிருந்தது. பாரதியைப் போற்றி அவர் வழியில் நடக்கத் தொடங்கிவிட்டது தமிழ் உலகு. இந்தத் தமிழ் உலகு தொல்காப்பியப் பாயிரத்திலே பனம்பாரனார் குறிப்பிட்ட ஒட்டுமொத்தத் தமிழ் உலகு அன்று. ஆயினும் அத்தமிழ்கூறு நல்லுலகின் குற

பதிவு
க. திருமூர்த்தி

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரித் தமிழ்த்துறையும், நாகர்கோவில் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து 2026 ஜூலை 22 அன்று சிறப்புக் கருத்தரங்கை நடத்தின. பிஷப் ஹீபர் கல்லூரியின் அறுபதாம் ஆண்டு, காலச்சுவடு பதிப்பகத்தின் முப்பதாம் ஆண்டு, காலச்சுவடு இதழின் முந்நூறாவது இதழ் நிறைவு ஆகியவை முன்னிட்டு நடைபெற்ற இக்கர

பதிவு
மா. ஸ்ரீபிரசன்னா

திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் 21.07.2026 அன்று மதியம் ‘மூவி கிளப்’பும் அலர் வெளியீடும் இணைந்து ‘ஆவணப்படம் திரையிடல், நூல் அறிமுக நிகழ்வுகளை நடத்தின. விரிவாக்கப்புல முதன்மையர் ஆனந்த கிதியோன் தொடக்கவுரை ஆற்றினார். தொடர்ந்து ‘கொலக்கால் திரிகை’ என்ற கு. அழகிரிசாமி ஆவணப்ப

பதிவு
லாவண்யா சுந்தரராஜன்

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர இலக்கியத்தில் இயங்கிவரும் கவிஞர் ஆனந்த்தின் படைப்புகள் குறித்து ஒருநாள் கருத்தரங்கம் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக நூல் வெளியீட்டு அரங்கில் 01.08.2026 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. ‘காலவெளியில் பூத்த அளவில்லாத மலர்’ என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில் எழுத

விருதுகள்

ய. மணிகண்டனுக்கும் காலச்சுவடு பதிப்பகத்திற்கும் விருது திருக்கோவலூர்ப் பண்பாட்டுக் கழகத்தின் 49ஆம் ஆண்டு கபிலர் விழாவில், பேராசிரியர் ய. மணிகண்டன் எழுதிய ‘பாரதியின் தராசு’ நூலுக்கும், அந்நூலை வெளியிட்ட காலச்சுவடு பதிப்பகத்திற்கும் ‘சிறந்த நூல்; பதிப்பகத்திற்கான பரிசு’

பதிவு
கிருஷ்ணபிரபு

  சென்னை கலை, இலக்கிய நிகழ்வுகளில் பல குழுக்களும் இயக்கங்களும் தோன்றி வளர்ந்துள்ளன. சிறுவயது முதலே அவற்றுடன் இணைவும் தொடர்பும்  இருந்தாலும், சூழலின் காரணமாக விலகியோ, விலக்கப்பட்டோ உதிரியாகச் செயல்பட்டோரில் மு. நடேஷும் ஒருவர். இவருடைய கலைப் பயணம் ஓவியம், அரங்க நாடகம், சிறுபத்திரிகை எ

கற்றனைத்தூறும் - 18
சாரா அருளரசி

நண்பர் ஒருவர், அவருடைய நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தை ஒரே தவறைத் தொடர்ந்து  செய்வதாகவும் அதனை எவ்வாறு சரிசெய்வது என்றும் கேட்பதற்காக அழைத்திருந்தார். அவருடைய குரல் கவலையில் தோய்ந்திருந்தது. நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தை. குழந்தையை இதற்காகக் குறைகூறிக்கொண்டே இருந்தால், பதற்றத்தில் அ

கவிதைகள்
இந்த்ரா ஸந்த், தமிழில்: ரா. தீபா

Courtesy: Bandu Manamperi, Sri Lanka 1 மரிக்கொழுந்து வாசிப்பின் அடையாளமாய், அன்று நான் தந்தது  ஒரு வெள்ளை இறகு.  ஆனால், அந்த இறகைவிடவும்  ஏதோ ஒரு மென்னுணர்வின் சிலிர்ப்பு...  உன்னிடம் எதைப் பரிமாறிக் கொள்ளும்போதும்  ஏற்படுகிறது. இயற்கையின் கைவண்ணத்துடன

கவிதைகள்
ஸுதிர் மோகே, தமிழில்: ரா. தீபா

ஓவியம்: எஸ்.இ. ஜெபா  1 நீராடி முடித்து ஈரக்கூந்தலை உலர்த்திக் கொண்டிருந்தேன். நாடோடிப் பித்தன் ஒருவன் , அதைத் தனது பாடலாக்கிக்கொண்டான்! ஆகாயம் எங்கும் நான் நிறைந்திருந்தேன் .  சுயநினைவே இல்லை.  அடங்காத தாகம் மட்டும்  தவித்துக் கொண்டிருந்தது  என் உதடுகளில்

மதிப்புரை
ஷாலினி பிரியதர்ஷினி

சிதைந்த பிம்பம்  (நாடகம்) கிரீஷ் கார்னாட் தமிழில்: பாவண்ணன்  வெளியீடு:  காலச்சுவடு பதிப்பகம் 669 கே.பி. ரோடு நாகர்கோவில் - 1  பக். 64 ரூ.. 60   “ஒருவர் பெண்ணாகப் பிறப்பதில்லை; பெண்ணாக உருவாக்கப்படுகிறார்” என்கிறார் சிமோன் த பொவா. ஆண் மயப் பார்வ

உள்ளடக்கம்