தருணங்களின் புத்தகம்

ஓவியம்: எஸ்.இ. ஜெபா
தருணங்களின் புத்தகம்
1
நான் வாழாத வாழ்க்கைகளுக்குள்ளிருந்து வந்த கடிதம்போல
அதிகாலை நிலவு.
பட்டப்பகலிலும்
தன்னை மறந்து
ஒளிர்ந்துகொண்டிருக்கிறது.
நான் என் ஆசிரியர்களில் ஒருவரைக் கண்டடைந்துவிட்டேன்
2
காற்றிலிருந்து ஒரு சிட்டுக்குருவி
வந்தது
பிறகு
போய்விட்டது
3
மண்ணைக் கையில் எடுக்கிறேன்
அது சுவாசிக்கிறது,
லொக்கு லொக்கு என இருமுகிறது.
4
அந்தி வானம் —
தன் நாவால்
காயங்களை
ஒரு புலிபோல நக்கிக்கொண்டிருக்கிறது.
நான் நீண்ட வரிசையில் நிற்கிறேன்
முன்னே கொசுக்களும்
