செப்டம்பர் 2026
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
செப்டம்பர் 2026
    • கட்டுரை
      மோடிக்குப் பயம் காட்டிய கரப்பான்பூச்சிகள்
      தமிழகத்தில் இடஒதுக்கீடு கிரீமிலேயர்முறை ஏன் தேவை?
      முஸ்லிம்களும் இடஒதுக்கீடும் ஒரு வரலாற்றுப் பார்வை
      இரண்டு பாடல்கள், இரண்டு தேசியக் கருத்துருக்கள்
      247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்
    • கதை
      வன்கெட்டு
    • பத்தி: காணச் சொல்லுகிறேன்
      ‘யார் கையையும் எதிர்பாக்காம வாழ்ந்திருவேன்’
    • கற்றனைத்தூறும் - 18
      புதிய பாதை புதிய பயணம்
    • திறந்த மடல்
      தேஜ்பால் வழக்கிற்குப் பிறகு: ஆண் முற்போக்குவாதிகளுக்குப் பெண்ணியவாதியின் மடல்
    • பாரதியியல்
      இறந்த எட்டே மாதங்களில் பாரதியின் வழிநின்ற ‘தமிழ் உலகு’
    • விருதுகள்
      விருதுகள், வாழ்த்துகள்
    • பதிவு
      காலச்சுவடு: 30 - 300
      அழகிரிசாமியும் மாதொருபாகனும்
      அகப்பயணத்தின் தடம்
      அடர் நிறத்தில் இசைக்கும் மனம்
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • பத்தி இன்றும் என்றும் 5
      சுமித் சர்க்கார் (1939 - 2026) வரலாறு என்னும் கலை
    • எதிர்வினை
      எந்தத் தமிழ்ச்சொல் மெய்யில் தொடங்குகிறது?
    • மதிப்புரை
      பெண்களுக்கு மறுக்கப்படும் ஹமார்ஷியா
    • கவிதைகள்
      தருணங்களின் புத்தகம்
      மரிக்கொழுந்து
      ஸுதிர் மோகே கவிதைகள்
    • அஞ்சலி: வைகறை வாணன் (1950 –2026)
      ‘வென்றிலன் என்றபோதும்...’
    • தலையங்கம்
      தவெகவின் நூறு நாள்கள்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு செப்டம்பர் 2026 பதிவு அகப்பயணத்தின் தடம்

அகப்பயணத்தின் தடம்

பதிவு
லாவண்யா சுந்தரராஜன்

ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாகத் தீவிர இலக்கியத்தில் இயங்கிவரும் கவிஞர் ஆனந்த்தின் படைப்புகள் குறித்து ஒருநாள் கருத்தரங்கம் சென்னை, அண்ணா நூற்றாண்டு நூலக நூல் வெளியீட்டு அரங்கில் 01.08.2026 சனிக்கிழமை அன்று நடைபெற்றது. ‘காலவெளியில் பூத்த அளவில்லாத மலர்’ என்ற தலைப்பிலான இக்கருத்தரங்கில் எழுத்தாளர்கள், வாசகர்கள், மாணவர்களால் அரங்கு நிறைந்திருந்தது.

கருத்தரங்கத்தைத் தொடங்கிவைத்து ஆர். சிவகுமார் “ஆனந்த் என்ற கவிஞனைப் புரிந்துகொள்ள, அவருடைய கவிதைகளை மட்டும் வாசிப்பது போதாது; அவருக்குள் உயிர்சக்தியாகத் தோன்றும் ‘இளவரசி’, அவரை உருவாக்கிய தந்தை–இலக்கியச் சூழல், சிறுபத்திரிகை இயக்கம், ஞானக்கூத்தன், ஆத்மாநாம் போன்ற உறவுகள், நினைவாகத் தொடர்ந்து வாழும் மரங்களும் மனிதர்களும், மொழி குறித்த அவருடைய ஆரம்பகாலத் தேடல், 1970களிலிருந்து வளர்ந்த நவீனத் தமிழ் கவிதையின் வரலாறு ஆகியவை ஒன்றாக வாசிக்கப்பட வேண்டும்” என்றார்.

கல்யாணராமன், ஆனந்த்தின் படைப்புகளில் காணப்படும் தத்துவ ஆழம், எளிமையான மொழி, நுண்ணிய கவித்துவப் பார்வை ஆகியவை நவீனத்  தமிழ் இலக்கியத்தில் அவருக்குத் தனித்துவமான இடத்தை அளித்துள்ளதாகக் கூறிச் சில சுவாரசியமான செய்திகளை மேடையில் பகிர்ந்துகொண்டார்.

கவிதை அமர்வில் ஷாஅ, ஆனந்த்தின் கவிதைகளுக்கு நாற்பத்தேழு ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உண்டு எனக் குறிப்பிட்டார்.  “ஆனந்த்தின் கவிதை வெளி உலகைப் பதிவு செய்வதற்கான மொழி அன்று; தன்னை அறிந்து முழுமையை நோக்கிச் செல்லும் அகப்பயணம்” என்றார்.

றாம் சந்தோஷ் வடார்க்காடு  பேசுகையில் ஆனந்த்தின் கவிதை தனிமனித “நான்” என்பதில் தொடங்கிப் பிரபஞ்சத்தை நோக்கி நகர்வதாகக் குறிப்பிட்டார்.  அவரது கவிதைகளை அவர் “நான் – காலம் – இடம் – பிரபஞ்சம்” எனும் தத்துவக் கோணத்திலேயே வாசிப்பதாகவும் குறிப்பிட்டார்.

வேணு வேட்ராயன் “ஆனந்த்தின் கவிதை மனக்காயங்களையும் அகப்பிரளயத்தையும் வெளிப்படுத்தும் கருவி மட்டுமன்று; அவற்றிலிருந்து மீண்டு, ஆழ்மனதில் மறைந்திருப்பதை உணர்ந்து, தன்மையின் எல்லைகளைக் கடந்து, நினைவு – காலம், பார்வையாளர் – காட்சி என்ற இருமைகளைக் கரைத்து, காலமற்ற அனுபவ நிலையை அடையும் அகமாற்றச் செயல்பாடு”  என விளக்கினார்.

நாவல் அமர்வில் உரையாற்றிய சுரேஷ் பிரதீப், ‘சுற்றுவழிப் பாதை’ மெய்மையைத் தேடி ஓர் இறுதி முடிவை அடையும் நாவல் அல்ல; மனித மனவெளி, நிகழ்காலம், பரிவு, காதல், விழிப்புணர்வு ஆகியவற்றின் வழியே மனிதன் தன்னைத் தொடர்ந்து தேடும் பயணத்தைப் பற்றிய மெய்யியல் நாவல்”  என்றார்.

பிரபாகரன் சண்முகநாதன் ‘சுற்றுவழிப் பாதை’ நாவலிலுள்ள தத்துவ விசாரங்களை நீக்கிவிட்டால் அது ஒரு வரலாற்றுப் புனைவின் எல்லைக்கு அருகே நிற்கும் நாவல் என அழுத்தமாகக் குறிப்பிட்டார். “தன்னையறிதலின் வழியே உலகைப் புரிந்துகொள்ள முயலும் மனித மனத்தின் முடிவற்ற கேள்வி கொண்ட பயணமே இந்நாவல்” என முடித்தார்.

பெஷாரா, ‘சுற்றுவழிப் பாதையோடு பயணம்’ எனும் தலைப்பில் உரையாற்றுகையில்,  இந்நாவல் தனக்குள் ஊடாடி, தன் மனதை அலைக்கழித்த வினாக்களுக்கு விடை கண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

ஆனந்த்தின் மொழியாக்கங்கள், கட்டுரைகள் குறித்த அமர்வில் பேசிய லதா அருணாச்சலம், “ஆனந்த்தின் மொழியாக்கங்கள் மூலப் படைப்பின் கருத்தை மட்டும் கடத்தவில்லை. அதன் தொனி, பண்பாட்டு அடர்த்தி, அந்நியத்தன்மை ஆகியவற்றைத் தக்கவைத்துக்கொண்டு தமிழில் சரளமான வாசிப்பு அனுபவத்தையும் உருவாக்குகின்றன” என விரிவாக எடுத்துரைத்தார்.

கவிஞர் ஷங்கர்ராமசுப்ரமணியன் பேசுகையில், “மனித மனத்தின் ஆழங்களையும் காலத்தின் இயக்கத்தையும் கவிதை, புனைவு, மொழிபெயர்ப்பு, சிந்தனை வழியே தொடர்ந்து ஆராயும் ஆனந்த், கலையை மனித வாழ்வை மீட்டுருவாக்கும் சக்தியாகக் கொண்டாடுபவர்” என்றார்.

கிருஷ்ணமூர்த்தி, ‘காலவெளிக் காடு’ நூலில்  “நான்” யார் என்பதை நேரடியாகத் தேடும் சிந்தனை, ‘கவிதை எனும் வாள்வீச்சு’ நூலில் கவிதை வழியே  தன்னை உணரும் நிலையாக மாறுவதாகக் குறிப்பிட்டார்.

நிறைவரங்கத்தில் பேசிய கவிஞர் மோகனரங்கன்; ஆனந்த்தின் நட்பு, மனிதநேயம், பரஸ்பர மரியாதை, உரையாடல், அகப்பார்வை ஆகியவற்றின் வழியே  அவருடைய படைப்புலகை அறிமுகப்படுத்தினார்.

தேவேந்திர பூபதி, “ஆனந்த்தை வெறும் எழுத்தாளராக மட்டும் நான் பார்க்கவில்லை. தமிழின் நீண்ட படைப்புப் பாரம்பரியத்தோடு தம்மை இணைத்துக்கொண்டு கவிதை, கட்டுரை, சிறுகதை, நாவல், ஓவியம் எனப் பல தளங்களில் இயங்கும் முழுமையான படைப்பாளியாகக் காண்கிறேன்” எனக் கூறினார்.

நிறைவுரையாற்றிய யுவன் சந்திரசேகர், “ஆனந்த்தை இலக்கியத்தின் வழக்கமான வரையறைகளுக்குள் அடைக்காமல், அனுபவங்களையும் உணர்வுகளையும் சிந்தனையின் வழியாகக் கீறிப் பார்க்கும் தனித்துவமான சிந்தனையாளராகப் புரிந்துகொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார்.

கவிஞர் ஆனந்த் தமது ஏற்புரையில், இலக்கியம் பிறருக்காக எழுதுவது அல்ல; தன்னை அறியவும் வாழ்க்கை அனுபவங்களின் பொருளைத் தேடவும் மேற்கொள்ளும் முடிவற்ற அகப்பயணமே.  இதைப் புரிந்துகொண்டு தொடர்ந்து தேடுவதும் அனுபவிப்பதும் முக்கியம் என்றார்.

 மின்னஞ்சல்: lavanya.sundararajan@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.