தேஜ்பால் வழக்கிற்குப் பிறகு: ஆண் முற்போக்குவாதிகளுக்குப் பெண்ணியவாதியின் மடல்
ஆண் முற்போக்குவாதிகளுக்கு,
போராளிகளாகத் தோளோடு தோள் நின்று பல போராட்டக் களங்களை நாம் சந்தித்திருக்கிறோம். தந்தை மகள்களாக, உடன்பிறப்புகளாக, இணையர்களாக, காதலர்களாக, எல்லாவற்றையும்விட முக்கிய மாகக் கருத்தியல்ரீதியாக ஒருவரையொருவர் மதிக்கும் நண்பர்களாக, பல சவால்களைச் சேர்ந்து சந்தித்த தோழமைகளாக இருந்திருக்கிறோம். இருப்பினும் ‘அன்புள்ள’ என்று அழைத்து இந்தக் கடிதத்தை என்னால் தொடங்க முடியவில்லை.
ஆகஸ்ட் 6, சக பெண் ஊழியரைப் பாலியல் வன்கொடுமைசெய்த வழக்கில் குற்றமற்றவர் என்று தெஹெல்காவின் முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பாலை விடுவித்து மபுசா கூடுதல் அமர்வு நீதிமன்றம் 2021இல் அளித்த தீர்ப்பைத் தவறென்று சுட்டிக்காட்டி ரத்துசெய்து உத்தரவிட்டது பாம்பே உயர் நீதிமன்றம்.
நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு ஊடகங்களைச் சந்தித்த தேஜ்பால், தனக்கு 62 வயதாவ தாகவும் மனைவி இருப்பதாகவும் உமர் காலித், ஷர்ஜீல் இமாம்போல் தானும் அரசியல் காழ்ப்புணர்ச்சியின் பலிகடாவாக்கப்பட்டிருப்பதாகவும் சொன்னார். தேஜ்பாலைப் போலல்லாமல், உமர் காலித்தும் ஷர்ஜீல் இமாமும்
