சுமித் சர்க்கார் (1939 - 2026) வரலாறு என்னும் கலை
“இந்திய வரலாற்றாசிரியர்களாகிய நாம் இதுவரை எழுத விரும்பிய வரலாறுகளையே எழுதிவந்திருக்கிறோம். நம்முடைய செயல்திட்டத்தை மட்டுமே நிறைவேற்றி வந்திருக்கிறோம். அந்த ஆடம்பரம் இப்போது மிக வேகமாக மறைந்துகொண்டிருக்கிறது.” தனது வாழ்வின் பிற்பகுதியில் அதுவரையிலான நீண்ட அறிவுலகப் பயணத்தைத் திரும்பிப்பார்க்கும் ஒரு தருணத்தில் சுமித் சர்க்கார் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
1939இல் கல்கத்தாவில் பிறந்து 2026,ஆகஸ்ட்,13 அன்று தில்லியில் மறைந்த சுமித் சர்க்கார் தனது செயலூக்கமிக்க பணிவாழ்வில் மூன்று வரலாற்றுச் சிந்தனைச் சட்டகங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மூன்றுமே வெளியிலிருந்து திணிக்கப்பட்டவை. முதலாவது, கறாரான மார்க்சியம். கடந்த காலத்தை மிகக் குறுகிய பொருளாதாரக் கண்ணோட்டத்தின் வழியாக மட்டுமே பார்த்தது அது. சர்க்காரின் சொந்த இடமான கல்கத்தாவில் மார்க்சியத்துக்கு மிகுதியான செல்வாக்கு இருந்தது. அவரது தந்தையும் வரலாற்றாசிரியர்தான். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்தவர்.
இரண்டாவது, ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த பின்நவீனத்துவமும் பின்காலனித்துவமும். உணர்வ
