வன்கெட்டு

ஓவியம்: மணிவண்ணன்
விடிந்ததிலிருந்தே சூசைநாயகத்தின் வீட்டில் ஒரே காராட்டம்.1 “வயது 62 ஆகுது, இதுக்கு மேல நீங்க ஊரெடு2க்க போக வேண்டாம்பா” என்றான் மகன் சாக்ரட்டீஸ். மெர்ச்சன்ட் நேவியில் செக்கன்ட் இஞ்சினியர் வேலை பார்க்கிறான். இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவன் வேலைபார்க்கிற கப்பல் சான் பிரான்சிஸ்கோ அடைந்திருந்தது. கேப்டன் அவனது சைனாஃப் வேலைகளை எல்லாம் முடித்துக் கையைப் பிடித்துக் குலுக்கி பேப்பர்களைபக் கைகளில் கொடுத்தார்.
“மை விஷ்ஷஸ் சாக்ரட்டீஸ், இந்த விடுமுறை இன்பமாக இருக்கட்டும். குடும்பத்தோடு நன்றாகக் கொண்டாடுங்கள்” என்றார். கப்பலில் விரவிக்கிடந்த உப்புக் காற்றோடு அவர்கள் இருவரின் புன்னகையும் பூத்தது.
சூசைநாயகத்தின் மனைவி ஃபிலோவும் சாக்ரட்டீஸோடு சேர்ந்துகொண்டு, ஒரே குரலில் சொன்னார்க
