247 தமிழ் எழுத்துக்களும் 2 ஆங்கில ஐயர்களும்
அதிகாரம் - 2
தொலைக்காட்சிகளில் காணொலித் தொகுப்புகளை மீள் ஒளிபரப்புவதுபோல் நான் 2026 ஜுலை காலச்சுவடு இதழில் எழுதியதன் சுருக்கத்தைத் தருகிறேன்:
19ஆம் நூற்றாண்டு இங்கிலாந்தில், மக்ஸ் முல்லர் போன்ற கீழைத்தேயவாதிகள் இந்தியாவில் மதமாற்றம் செய்வதற்கு, ‘தலையைச் சுற்றவைக்கும் மிரட்டலான தமிழ் எழுத்துக்கள்’ பெரும் தடையாக இருப்பதாக உணர்ந்தார்கள்; மேலும், கண்ணை உறுத்தும் இந்தக் ‘கோணல்மாணல் எழுத்துக்களை’ ஒழித்துக்கட்டிவிட்டு, அவற்றிற்குப் பதிலாக ‘குழப்படியற்ற அழகொழுகும் ரோமானிய எழுத்துக்க’ளைக் கொண்டுவருவதே ஒரே வழி என்றும் கருதினார்கள்.
இந்தக் கட்டுரையில் ஒரு மாற்றம் செய்திருக்கிறேன். ஜூலை இதழில் உபயோகித்த ‘ரோமானியமாக்க’லுக்குப் பதிலாக லத்தீனமாக்கல் என்று மாற்றியிருக்கிறேன். இது உங்களுக்குக் குழப்பம் விளைவித்தால் இதற்கு முழுக் காரணம் மணி வேலுப்பிள்ளை. அவர்தான் லத்தீனமாக்கல் என்பதே பொருத்தமான பயன்பாடு என்பதில் தெளிவாக இருந்தார்.
இங்கிலாந்தில் விவாதித்த இந்த எழுத்து மாற்று யோசனைகள் அக்காலத்தி
