புதிய பாதை புதிய பயணம்
நண்பர் ஒருவர், அவருடைய நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தை ஒரே தவறைத் தொடர்ந்து செய்வதாகவும் அதனை எவ்வாறு சரிசெய்வது என்றும் கேட்பதற்காக அழைத்திருந்தார். அவருடைய குரல் கவலையில் தோய்ந்திருந்தது. நான்காம் வகுப்புப் படிக்கும் குழந்தை. குழந்தையை இதற்காகக் குறைகூறிக்கொண்டே இருந்தால், பதற்றத்தில் அதே தவற்றைத் திரும்பத் திரும்பச் செய்யும் என்பதால், தொடர்ந்து தவறாகவே எழுதுகிறாய் என்று குற்றம்சாட்டாமல் இருக்கச் சொன்னேன். திரும்பவும் எழுதச் செய்து, கடினமான சொற்களை, குழந்தை தவறும் சொற்களை அதற்குப்பிடித்த வண்ணத்தில் ஹைலைட்டர் உபயோகித்து, வண்ணம் தீட்டச் செய்யலாமென்றும் இதனை ஓரிரு நாள்கள் செய்கையில் கடினமான சொற்களின் சரியான எழுத்துகள் மனத்தில் பதிந்துவிடும்; தவறு நேராது என்றொரு யோசனையைச் சொல்லிவிட்டு, குழந்தையிடம் எப்போதும் நேர்மறைச் சொற்களை உபயோகிக்கப் பயிலும்படி, ஓர் ஆலோசனையையும் சொன்னேன்.
பழக்கப்பட்ட சிந்தனைகளுக்குப் படிந்த என் மனம் உடனே, என் காலத்தில் இப்படியா இருந்தது, ஆசிரியராகட்டும் தாய்தந்தையாக இருக்கட்டும், அடி வெளுத்துவிடுவார்கள் என்று சொன்னது உண்மைதான். ஆனால் அப
