தலையங்கம்
ஆசிரியர் குழு

தமிழ்நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் நாற்பதாண்டுகளுக்கும் மேலாகச் சத்தமின்றி மாணவர் மன்றத் தேர்தல் முடக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. கடைசியாக சென்னை மாநிலக் கல்லூரியில் பத்தாண்டுகளுக்கு முன்னர் தேர்தல் முடக்கப்பட்டது. இதுபற்றிய விவாதங்கள் பரவலான கவனத்தைப் பெறவில்லை; மாறாக

கடிதங்கள்

காலச்சுவடு செப்டம்பர் 2026 இதழில் ‘தவெக அரசின் 100 நாள்கள்’ தலையங்கம் நேர்மையாகவும் நடுநிலையோடும் பதிவு செய்யப்பட்டுள்ளது. தூற்றவும் இல்லை, தூக்கிப் பிடிக்கவும் இல்லை. தனது செயல்பாடுகளைப் பொறுத்து அக்கட்சி நீடித்திருக்கும். ஜி. ஜவஹரின் ‘வன்கெட்டு’ கடலோரக் கிறிஸ்தவக் கிராமத

எதிர்வினை
இ. அண்ணாமலை

பிழையற்ற அகராதி எதுவும் இல்லை. மொழியின் எல்லையற்ற மாறிக்கொண்டே இருக்கும் இயல்பும் ஒரு காரணம். அகராதி தொகுப்பவரின் பயிற்சிக் குறைவு மற்றொரு காரணம். இக்கால அகராதியைத் தொகுக்கவும் நிகண்டைத் தொகுக்கவும் தேவைப்படும் பயிற்சிகள் வேறுவேறு. தொகுப்பாளரின் மொழிக் கருத்தியல்கள் வேறுவேறு அகராதிகளைத் தரும். பிறமொ

கட்டுரை
தி. பரமேசுவரி

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஏப்ரல் 16, 2026 அன்று தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் ‘மகளிர் நலன்’ தலைப்பில் சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம், மெல்லிய துணி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அடங்

கட்டுரை
தீபா சின்ஹா; தமிழில்: ஷாலினி பிரியதர்ஷினி

அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட’த்தைப் பாலினக் கண்ணோட்டத்துடன் பரிசீலிக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. குடிமக்கள் நல்வாழ்வில் அரசின் பங்கு என்னவாக இருக்கிறது? அது என்னவாக இருக்க வேண்டும்?

பத்தி இன்றும் என்றும் 6
ராமச்சந்திர குஹா; தமிழில்: மருதன்

நான் பெரும்பாலும் தனித்து இயங்குபவன். முன்னாள் மாணவர் சங்கங்களிலும் வாட்ஸ்அப் குழுக்களிலும் சேர்வதைத் தவிர்த்து வந்திருக்கிறேன். ‘என்னை உறுப்பினராக ஏற்றுக்கொள்ளும் எந்த அமைப்பிலும் சேர மாட்டேன்’ எனும் குரூச்சோ மார்க்ஸின் மனநிலைதான் என்னுடையதும். ஆனால் 1980களில் டெல்லியில் மக்கள் ஜனநா

பதிவு: காலச்சுவடு 30 - 300
பிரேம்குமார்

காலச்சுவடு பதிப்பகம் 30ஆம் ஆண்டு, காலச்சுவடு 300 இதழ்கள் ஆகியவற்றைச் சிறப்பிக்கும் விதமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி கோயம்புத்தூர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வினை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, நா. மகாலிங்கம் தமிழாய்வு மையம், க

கட்டுரை
சுப்பிரமணி இரமேஷ்

தமிழ்ச் சிறுகதையின் யதார்த்த எழுத்தென்பது கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட விளிம்புநிலை மக்களைப் பற்றியதாகவே ஒரு குறிப்பிட்ட காலம்வரை கருதப்பட்டது. கிராமத்திற்கும் நகரத்திற்குமான இடைவெளி குறைந்துவிட்ட இரண்டாயிரத்திற்குப் பிறகும் அத்தகைய கதைகளை யதார்த்தவாதக் கதைகளுக்குள் பொருத்துவதில் சில தயக்கங்கள் ஏற

சிற்றிதழ்கள்: ஈழம் & புலம்பெயர்
அனோஜன் பாலகிருஷ்ணன்

ஈழத்தில் இலக்கியச் சிறுபத்திரிகை மரபின் தோற்றுவாய் எது? 1915இல் தமிழ்மகள், 1927இல் மாதர்மதிமாலிகை போன்ற இதழ்கள் வெளியாயின. அவை பெண் விடுதலையை, அறிவியல் உரையாடல்களைப் வெளியிடும் முற்போக்கு இதழ்களாக இருந்தனவே தவிர நவீன இலக்கிய உரையாடல்களைச் செய்யவில்லை. இதேபோல 1933இல் ஞாயிறு இதழ் யாழ்ப்பாணக் கலாநிலைய

பாரதியியல்
ய. மணிகண்டன்

‘பாரத மாதா திருப்பள்ளி எழுச்சி’, ‘பாரத மாதா நவரத்ந மாலை’, ‘பாரத மாதா’ என்றெல்லாம் பாரத மாதாவைப் பற்றி எழுதியது மட்டுமல்ல, பாரத மாதாவிலும் எழுதியிருக்கின்றார் பாரதி என்பது இப்போது தெரியவந்துள்ளது. ஸமரஸ போதினி என்னும் பெயரில் தஞ்சையிலிருந்து வார இதழொன்று 1920

பதிவு
சிவபிரசாத்

பெருமாள்முருகன், சுகுமாரன், சு. தியடோர் பாஸ்கரன் பெங்களூரு புக் பிரம்மா இலக்கியத் திருவிழா கடந்த மாதம் 21, 22, 23 ஆகிய நாட்களில் செயின்ட் ஜான்ஸ் ஆடிட்டோரிய வளாகத்தில் நடைபெற்றது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளம் எனத் தென்னிந்திய மொழிகளில் எழுதும் மூத்தப் படைப்பாளிகளில் தொடங்கி இளம

கவிதைகள்
சம்யுக்தா மாயா

ஓவியம்: சுரேஷ் ஜெயராம் 1 அனாதி பரந்து விரிந்த இந்த வெட்டவெளிக்குள் நாம் எவ்வாறு வந்தோம்? வெயிலில் மினுங்கும் பச்சைச் சிறகுகள் கொண்ட இரு ஈக்கள் போல ஏன் இப்படிச் சுற்றித் திரிகிறோம்? நம் நிர்வாணத்தைக் காண நம் இருவரைத் தவிர - இங்கு வேறு எவரும் இல்லை. காலம் உருவாவது ஒளியின் சுழற்ச

தொடர் 80+
ரம்யா

1 எந்தச் சுதந்திரமான பெண்ணும் இந்தச் சமூகத்தில் இயங்கக் கொடுக்கும் விலை ஒன்றுள்ளது. அதை நினைவூட்டும் ஒரு சித்திரத்தை எழுத்தாளர் பெருமாள்முருகன் மதுரையில் நடந்த (நவம்பர் 28, 2024) அம்பை 80+ நிகழ்வில் கொடுத்தார். அவர் உரை அம்பையுடனான தொடர்பையும் ஆய்வுப் பணிகளுக்காக அவர் எடுத்துக்கொள்ளும் சிரத்தையைய

நினைவஞ்சலி: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (1942-2026)
சு.ஆ. வெங்கட சுப்புராய நாயகர்

இலக்கியத்துக்கான உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு, புக்கர் பரிசு, பிரான்சின் கோன்கூர் பரிசு என உலகில் எந்தப் பகுதியில் இலக்கியப் பரிசு குறித்த அறிவிப்பு வெளியானாலும் பரிசுக்குரிய அந்த நூல் குறித்தும் அப்படைப்பின் ஆசிரியர் பற்றியும் உடனுக்குடன் எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் கருத்து

அஞ்சலி: சாலமன் பாப்பையா (1936 - 2026)
இரா. பிரபாகர்

1987இல் அமெரிக்கன் கல்லூரியின் தமிழ் விரிவுரையாளர் நேர்காணலுக்குச் சென்றிருந்தேன். துறைத்தலைவரான சாலமன் பாப்பையா தேர்வுக்குழுவில் இருந்தார். அன்று கல்லூரி முதல்வரைவிடத் துறைத்தலைவருக்கே முழு அதிகாரம் இருந்தது. நேர்காணலின்போது, கரும்பலகையின் முன் தேர்வுக்குழுவை மாணவர்களாகப் பாவித்து பாடம் நடத்த வே

அஞ்சலி: க்ளோரியா ஸ்டெய்னம் (1934 - 2026)
ஷாலினி பிரியதர்ஷினி

‘உண்மை உங்களை விடுவிக்கும். ஆனால், அதற்குமுன் பலவிதங்களில் நோகடிக்கும்.’                                                             &n

கதை
எழில் சின்னதம்பி

ஓவியம்: நரசிம்மபாலாஜி ஒரு இயல்பான நாளிலிருந்துதான் எனக்கு அந்தக் குறைபாடு தோன்றியது. அது குறைபாடா அல்லது இயல்புமீறலா அல்லது வெற்றுக்கனவா என்று முதலில் எனக்குப் புரியவில்லை. எப்போதும் காலையில் எழுவதுபோல் படுக்கையிலிருந்து எழுந்தபோது குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்த மனைவியின் பின்னிடுப்புக்குக்

கவிதை
அரபியில்: அதோனிஸ்; தமிழில்: அ. ஜாகிர் ஹுசைன்

அதோனிஸ் (1930): இயற்பெயர் அலி அஹ்மத் சயீத் இஸ்பர். 1957இல் சிரியாவை விட்டுப் புலம்பெயர்ந்து லெபனானில் குடியேறினார். லெபனானில் ஏற்பட்ட போர்ச்சூழல் காரணமாக 1985இல் குடும்பத்துடன் பாரிஸில் குடியேறினார். 1973இல் பெய்ரூத்தில் உள்ள புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்

கட்டுரை
மா. முத்துகுமார்

‘காந்தாரா’ (2022) படத்தின் இறுதிக்காட்சியில் ‘வராக ரூபம்’ பாடல் ஒலிக்கிறது. இது காட்டின் வழிபாட்டுத் தெய்வமான ‘பஞ்சுர்லி’ என்ற பன்றித் தெய்வத்தை, விஷ்ணுவின் வராக அவதாரம் என்று பெயரிடுகிறது. வெளிப்புறப் பார்வைக்கு இது தெய்வத்தைப் போற்றிப் பாடுவதுபோலத் தோன்றலாம். ஆன

கட்டுரை
தி.அ. ஸ்ரீனிவாஸன்

படங்கள்: தி.அ.ஸ்ரீ சுவாமி ஆனந்ததீர்த்தரின்(1905-1987) பெயரை நான் முதல்முதலாகக் கேள்விப்பட்டது, ஸ்டாலின் ராஜாங்கம் சில ஆண்டுகளுக்கு முன்பு காலச்சுவடில் எழுதிய கட்டுரையைப் படித்தபோதுதான். அவரைக் குறித்த அறிமுகத்தோடு, தமிழ்நாட்டில் மேலூர் பகுதிகளில் தீண்டாமைக்கு எதிரான அவரது செயல்பாடுகளையும் அதி

பதிவு
த. விஷ்ணுகுமாரன்

புகைப்படம்: நிலா ஸ்டூடியோ நவீனத் திராவிட மொழி ஆய்வில் பிதாமகனாகப் போற்றப்படுபவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் வ.அய்.சுப்பிரமணியம் . வடசேரியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் கேரளப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவரானதுடன் அங்கு மொழியியல் துறை உருவாகவும் காரணமாக இருந்தார். 1980களில்

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது

உஸ்தாத் (சிறுகதைகள்) சுகுமாரன் வெளியீடு:  நூல்வனம் M22 ஆறாவது அவென்யூ, அழகாபுரி நகர், ராமாபுரம், சென்னை – 600 089 கைப்பேசி: 91765 49991  பக். 200 ரூ.. 250 நல்ல மனநிலைக்கேற்ப வாசிக்கலாம் என்று தோன்றும் கதைகள் உள்ளன. எந்தச் சூழலில் வாசித்தாலும் நல்ல மனநிலையை உருவாக்கிக்

உள்ளடக்கம்