அக்டோபர்
SIGN IN
SIGN UP
இதழாகப் படிக்க
SUBSCRIBE
அக்டோபர்
    • கட்டுரை
      மகளிர் நலத்திட்டங்கள்: தாய்மாமன் சீர்சுமந்து வாராரு...
      தாய்மாமன் சீர்: உரிமையா? சுரண்டலா?
      அரவிந்தன்: மூன்றாயிரத்தின் கதைஞன்
      சினிமாவில் தெய்வங்களும் படிநிலைகளும்
      மெய்வருத்தம் பாராத கலகக்காரர்
    • அஞ்சலி: க்ளோரியா ஸ்டெய்னம் (1934 - 2026)
      பெண்ணியம் இயக்கமல்ல, வாழ்வு
    • கதை
      வால்
    • பத்தி இன்றும் என்றும் 6
      சிவில் உரிமைப் போராளிகள்
    • பாரதியியல்
      பாரதியும் பாரத மாதாவும்
    • பதிவு: காலச்சுவடு 30 - 300
      வாசிப்பை விரிவுபடுத்திய காலச்சுவடு
    • அஞ்சலி: சாலமன் பாப்பையா (1936 - 2026)
      உயிர்த்தெழ விரும்பாத கிறித்துவர்
    • பதிவு
      புக் பிரம்மா: தென்மொழிகளின் திருவிழா
      வ.அய்.சு. நூற்றாண்டு: திராவிடவியல் ஆய்வுகளின் தூண்டுகோல்
    • தொடர் 80+
      அம்பை சுமந்த பெட்டி
    • கடிதங்கள்
      கடிதங்கள்
    • எதிர்வினை
      மொழிக் கருத்தியல் வரையறுக்கும் அகராதி
    • சிற்றிதழ்கள்: ஈழம் & புலம்பெயர்
      ஈழச் சிற்றிதழ்களும் நவீன இலக்கியமும்
    • மதிப்புரை
      காலமும் சாபமும் அலைக்கழிக்கும் மனிதர்கள்
    • கவிதைகள்
      சம்யுக்தா மாயா கவிதைகள்
    • தலையங்கம்
      முடக்கப்படும் வளாகங்கள்
    • நினைவஞ்சலி: எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி (1942-2026)
      தேர்ந்த வாசகரை இழந்த நூல்கள்
    • கவிதை
      அந்த ஒற்றைக் கண்
    • Sign In
    • Register
குறிப்பு
குறிப்பு

வாசகர் கவனத்திற்கு

காலச்சுவடு:

  • தனி இதழ் ரூ. 60
  • ஆண்டுச் சந்தா ரூ. 500
  • இரண்டாண்டுக்குச் சந்தா ரூ. 850
  • ஐந்தாண்டுச் சந்தா ரூ. 1800
  • * காலச்சுவடு ஆயுள் சந்தா ரூ. 5,000
  • * நிறுவனங்களுக்கு ஆண்டு சந்தா ரூ. 600
  • நிறுவனங்களுக்கு இரண்டாண்டு சந்தா ரூ. 1000
  • நிறுவனங்களுக்கு ஐந்தாண்டு சந்தா ரூ. 2500

வெளிநாட்டுச் சந்தா, மாணவர் சந்தா தற்காலிகமாக ரத்து செய்யப்படுகிறது

சந்தா செலுத்துபவர்களுக்கு இணையச் சந்தா அன்பளிப்பாக வழங்கப்படும். Google pay, Paytm ஆகியவற்றின் வழி எளிதாகச் சந்தா செலுத்த Qrcodeஐ இணைத்துள்ளோம்.

குறிப்பு

காலச்சுவடு ஏப்ரல், மே, ஜூன் – 2020 மாத இதழ்களைச் சேகரிப்பவர்களுக்காகச் சில பிரதிகள் மட்டும் அச்சடித்திருக்கிறோம். தனி இதழின் விலை ரூ. 75. இது அடக்கவிலை.

மேற்கண்ட தொடர்புகளின் வழி இதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். தொலைப்பேசியில் அழைப்பதைத் தவிர்க்கவும்.

(மிக அதிகமான தயாரிப்புச் செலவு காரணமாக சந்தா செலுத்தியவர்களுக்கு இந்தப் பிரதிகளை அனுப்ப இயலாமைக்கு வருந்துகிறோம். அவர்களுக்கு இணைய இதழைப் படிப்பதற்கான ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.)
காலச்சுவடு அக்டோபர் பதிவு: காலச்சுவடு 30 - 300 வாசிப்பை விரிவுபடுத்திய காலச்சுவடு

வாசிப்பை விரிவுபடுத்திய காலச்சுவடு

பதிவு: காலச்சுவடு 30 - 300
பிரேம்குமார்

காலச்சுவடு பதிப்பகம் 30ஆம் ஆண்டு, காலச்சுவடு 300 இதழ்கள் ஆகியவற்றைச் சிறப்பிக்கும் விதமாக ஆகஸ்ட் 28ஆம் தேதி கோயம்புத்தூர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்வினை குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறை, நா. மகாலிங்கம் தமிழாய்வு மையம், காலச்சுவடு அறக்கட்டளை ஆகியவை இணைந்து நடத்தின.

நா. மகாலிங்கம் தமிழாய்வு மைய இயக்குநர் முனைவர் இரா. ஜெகதீசன் சிறப்பு விருந்தினர்களை வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் முனைவர் தீபேஷ் சந்திரசேகரன் தலைமை தாங்கி விருந்தினர்களுக்குச் சிறப்புச் செய்தார். துணை முதல்வர் முனைவர் கே.எஸ். நாராயணன் வாழ்த்துரையில், காலச்சுவடு எனது வாசிப்புத் தளத்தை விரிவுபடுத்தியது” என்றார்.

தொடக்கவுரை ஆற்றிய சுகுமாரன் “1988 ஜனவரியில் தொடங்கப்பட்ட காலச்சுவடு இதழ் 1989 டிசம்பர் மாதம் தன் பயணத்தை நிறுத்திக்கொண்டது. இது சு.ரா.வின் பாதி நிறைவேறிய கனவாகவே அப்போது எஞ்சியது. இதழ் நிறுத்தப்பட்டதும் வாசகர்களிடமிருந்து பெறப்பட்ட சந்தாத் தொகையை உடனடியாகத் திருப்பி அனுப்பிய அறம், சிற்றிதழ் வரலாற்றில் முன்னுதாரணமற்ற நிகழ்வு. 1994இல் மீண்டும் உயிர்த்தெழுந்த காலச்சுவடு, இன்றுவரை தவறாமல் குறித்த தேதியில் வெளியாகிறது” எனக் குறிப்பிட்டார்.

‘தமிழ்ப் பாடல்களும் நானும்’ என்ற தலைப்பில் பேசிய வந்த இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, தனக்கே உரிய பாணியில் பேச்சும் பாட்டுமாக ஒட்டுமொத்த அரங்கையும் கட்டிப்போட்டார்.

“தஞ்சாவூரை மையமாகக் கொண்டு இயங்கிய தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகிய மூவரும் இன்றைய கர்னாடக இசைக்கு வடிவத்தைக் கொடுத்தவர்கள். விஜயநகர, மராட்டிய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் அரசவை மொழிகளாகத் தெலுங்கும் சமஸ்கிருதமும் இருந்தன. இந்தக் காலத்தில் தஞ்சாவூருக்கு தெலுங்கு பேசும் பிராமணர்கள் அதிகமாக வந்தனர். இதன் காரணமாகத்தான் கர்னாடக இசை மேல்தட்டு மக்களின் கலையாகவும் தெலுங்கு மொழியின் ஆதிக்கம் நிறைந்த ஒன்றாகவும் மாறியது” என்றார்.

காலச்சுவடுடனான தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் நாஞ்சில் நாடன்.

“காலச்சுவடு இதழில் நான் எழுதிய முதல் கட்டுரை ‘நாஞ்சில் நாட்டு வேளாளர் வாழ்க்கை.’ இந்தக் கட்டுரையை விரிவாக்கம்செய்து நூலாக வெளியிட வேண்டும் என்ற தூண்டுதலைத் தந்தவர் சுந்தர ராமசாமி. சு.ரா.வின் தூண்டுதலால் தொடங்கிய என் கட்டுரைப் பயணம், இன்று 500 கட்டுரைகளைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கிறது. சுந்தர ராமசாமியை என்னுடைய இலக்கியக் குருநாதர்களில் ஒருவராகக் கருதுகிறேன். என்னுடைய முதல் நாவலான ‘தலைகீழ் விகிதங்கள்’ நூலுக்குச் சு.ரா. மதிப்புரை எழுதியுள்ளார்.

“காலச்சுவடு இதழ் ஒருமுறை என்னுடைய சிறுகதை ஒன்றைப் பிரசுரிக்காமல் நிராகரித்திருக்கிறது. ஆனால் அதனை நான் காழ்ப்புணர்ச்சியாகக் கருதவில்லை. என் எழுத்தின் தரத்தை மேலும் மேம்படுத்திக் கொள்வதற்கான ஒரு சவாலாகவும் நல்வாய்ப்பாகவும் பார்த்தேன்” என்றார்.

காலச்சுவடு சிறுகதைகள்பற்றி எம்.கோபாலகிருஷ்ணன் பேசினார். “காலச்சுவடு இதழில் இதுவரை 200க்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் 1500க்கும் மேற்பட்ட சிறுகதைகள் வந்துள்ளன.” ‘1994ஆம் ஆண்டுவாக்கில் தமிழ் இலக்கியச் சூழலில் மாய எதார்த்தவாதம், பின்நவீனத்துவம் சார்ந்த எழுத்து முறைகள் நிலவின. எதார்த்தவாதக் கதைகள் காலாவதியாகிவிட்டன என்ற கருத்து பரவலாக இருந்த சூழலில், சிறுகதைகளில் புதிய பரிசோதனைகளை முன்னெடுக்கக் காலச்சுவடு களம் அமைத்துத் தந்தது.’

“கு.ப.ராஜகோபாலன், மௌனி, எம்.வி. வெங்கட்ராம், கு. அழகிரிசாமி, தி. ஜானகிராமன், ப. சிங்காரம் போன்ற இலக்கிய முன்னோடிகளின் தொகுக்கப்படாத கதைகளைக் கண்டறிந்து அதற்கென ஒரு சிறப்பிதழைக் காலச்சுவடு வெளியிட்டது. சிறுகதைகளின் பல்வேறு வடிவங்களைக் கொண்டாடும் விதமாகக் குறுங்கதைகளுக்கெனச் சிறப்பிதழ் வந்துள்ளது. ‘குரு வெட்டி’, ‘பத்மவியூகம்’ போன்ற நெடுங்கதைகளுக்கும் இடம் அளிக்கப்பட்டது. ஓர் இதழில் அதிகபட்சமாக ஆறு சிறுகதைகள் வெளிவந்துள்ளன” எனக் குறிப்பிட்டார்.

காலச்சுவடு வெளியிட்ட கிளாசிக் நாவல்கள் பற்றிப் பேசிய பெருமாள்முருகன், “காலமே ஒரு படைப்புக்குச் செவ்வியல் அந்தஸ்தை வழங்குகிறது” எனத் தொடங்கினார்.

“காசிபனின் ‘அசடு’, சம்பத்தின் ‘இடைவெளி’ போன்ற நாவல்களையும் கிளாசிக் வரிசையில் வெளியிடலாம் என நினைத்தபோது அவர்களின் குடும்பத்தினரைக் கண்டறிந்து அனுமதி பெற முடியவில்லை” என்றவர் “வாசகர்களுக்கு நல்ல படைப்புகளை அடையாளப்படுத்துவதே கிளாசிக் வரிசையின் நோக்கம்; இந்த வரிசை விரிவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளது” என்று கூறி நிறைவுசெய்தார்.

குமரகுரு கல்லூரியின் தமிழ்ப் படைப்பாக்கத் துறைத்தலைவர் முனைவர் சா. மரகதமணி தொகுப்புரை வழங்கினார். முனைவர் பட்ட ஆய்வாளர் பிரேம்குமார் நன்றி நவின்றார்.

நிகழ்வில் பங்கேற்ற அனைவருக்கும் கல்லூரி நிர்வாகத்தினர் மதிய உணவும் தேநீரும் சிற்றுண்டியும் வழங்கி உபசரித்தனர். பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்களோடு, கமலா ராமசாமியின் ‘நெஞ்சில் ஒளிரும் சுடர்’ நூலும் சிறப்புப் பரிசாக வழங்கப்பட்டது.

    மின்னஞ்சல்: premkumarpk2811@gmail.com

GO TO KALACHUVADU BOOKS
1988ஆம் ஆண்டு சுந்தர ராமசாமி (1931 - 2005) காலச்சுவடு இதழை நிறுவினார். காலாண்டு இதழாகத் தொடங்கப்பட்டுப் பின்னர் ஜூலை, 2000 முதல் இரு மாத இதழாகவும் மே, 2003 முதல் மாத இதழாகவும் வெளிவருகிறது.

படைப்பிலக்கியம், நுண்கலைகள், தத்துவம், வரலாறு, அரசியல், பொருளியல், வேளாண்மை, சூழலியல், திரைப்படம் உள்ளிட்ட தமிழ் வாழ்வின் பல்வேறு கூறுகளை உள்ளடக்கி வெளிவரும் காலச்சுவடு தனது 300வது இதழைக் கடந்துள்ளது. காலச்சுவடு சிறப்பிதழ்களாகவும் சிறப்புப் பகுதிகளுடனும் தொடர்ந்து வெளிவருகிறது. உலக, இந்திய மொழிகளின் படைப்பிலக்கியப் போக்குகளைக் கவனப்படுத்தும் பல்வேறு மொழிபெயர்ப்புகளைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது.
About Us
Privacy Policy
Terms & Conditions
முகப்பு
எங்களை பற்றி
சந்தா விவரங்கள்
புக் கிளப்
புத்தக ஆயுள் சந்தா
Font Help
தொடர்பு
சிறப்பு திட்டம் 6
சிறப்பு திட்டம் 5
சிறப்பு திட்டம் 3
சிறப்பு திட்டம் 2
2019-2020 புத்தகப் பட்டியல்
2015-2016 வெளியீடுகள்
2014 வெளியீடுகள்
2013 வெளியீடுகள்
2012 வெளியீடுகள்
2011 வெளியீடுகள்
2010 வெளியீடுகள்
2009 வெளியீடுகள்
Powered By
mag 2

flipkart
magzter
© COPYRIGHTS KALACHUVADU 2016. ALL RIGHTS RESERVED.