சம்யுக்தா மாயா கவிதைகள்

ஓவியம்: சுரேஷ் ஜெயராம்
1
அனாதி
பரந்து விரிந்த இந்த வெட்டவெளிக்குள்
நாம் எவ்வாறு வந்தோம்?
வெயிலில் மினுங்கும்
பச்சைச் சிறகுகள் கொண்ட
இரு ஈக்கள் போல
ஏன் இப்படிச் சுற்றித் திரிகிறோம்?
நம் நிர்வாணத்தைக் காண
நம் இருவரைத் தவிர - இங்கு
வேறு எவரும் இல்லை.
காலம் உருவாவது
ஒளியின் சுழற்சியில் மட்டும் தானா?
கானலின் கரையில் தனித்து நிற்கும்
அந்த ஒற்றைப் பனைமரத்தைப் பிடுங்கி
முனைசீவிக் கூராக்கித் தருகிறாயா..?
இந்தக் காய்ந்த நிலத்தில் எழுதுகிறேன்
கனலான என் கவிதைகளை.
2
அரிதாரம்
இந்த இரவில்
சக பயணிகளுடன் சகஜமாகப் பேசும்
குழந்தைகளுடன் குதூகலமாய்ச் சிரி
