வால்

ஓவியம்: நரசிம்மபாலாஜி
ஒரு இயல்பான நாளிலிருந்துதான் எனக்கு அந்தக் குறைபாடு தோன்றியது. அது குறைபாடா அல்லது இயல்புமீறலா அல்லது வெற்றுக்கனவா என்று முதலில் எனக்குப் புரியவில்லை. எப்போதும் காலையில் எழுவதுபோல் படுக்கையிலிருந்து எழுந்தபோது குளித்து உடை மாற்றிக்கொண்டு வந்த மனைவியின் பின்னிடுப்புக்குக் கீழே ஏதோ துருத்திக்கொண்டிருப்பதுபோல இருந்தது. கண்ணாடியைப் போட்டுப் பார்த்தேன். அவளுக்குப் பின் ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பது தெரிந்தது. குளித்து முடித்த பின் தலையில் சுற்றிக்கொள்ளும் துண்டைத்தான் பின்னால் சொருகி வைத்திருக்கிறாள் என்று நினைத்தேன். ஆனால் உற்றுப்பார்க்கையில் அது அசைந்தது. வழக்கத்துக்கு மாறாக நான் அவளையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைக் கண்ட மனைவி, “என்னவாயிற்று உனக்கு இன்றைக்கு? அலுவலகம் கிளம்பும் எண்ணம் இல்லையா?” என்ற
