லியோன் பேராலயம்
டேவிட் அல்பாஹரி (David Albahari - 1948) செர்பிய எழுத்தாளரான டேவிட் அல்பாஹரி கொஸாவோ பிரதேசத்தைச் சேர்ந்த யூத மரபில் பெஜ் நகரத்தில் பிறந்தார். பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். யூகோஸ்லாவியாவிலிருந்து புலம்பெயர்ந்த யூதர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபாடுகொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். டேவிட் அல்பாஹரி செர்பிய மொழியில் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளும் பத்துக்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலுள்ள முக்கிய நூல்களை செர்பிய மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது ஆறு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. ‘லியோன் பேராலயம்’ (The Basilica in Lyon) சிறுகதை எல்லன் எலியாஸ் புர்சாஜின் மொழியாக்கத்தில் அலெக்சாண்டர் ஹேமன் பதிப்பித்துள்ள Best European Fiction2010 தொகுப்பில் (டால்கீ ஆர்ச்சீவ் பிரஸ் வெளியீடு 2010) இடம்பெற்றுள்ளது. |
1</p