புதுப் பொருள் கற்பிக்கும் ஸ்பார்டகஸ்
ரோமானியப் பேரரசின் பெருமை மிக்க ஆட்சிக்காலத்தில் விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட அடிமைகளிலிருந்து முளைத்து எழுந்தவன் ஸ்பார்டகஸ். கிறித்து பிறப்பதற்கு முந்தைய எழுபத்தோராம் ஆண்டில் ரோமானிய அடிமைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக முதன்முதலில் தலைநிமிர்த்தி, கரம் உயர்த்திக் குரல் கொடுத்தவன் அவன். வாய்திறக்கவும் உரிமையற்றிருந்த அடிமைகளைத் திரட்டிய எழுச்சியின் நாயகனாக வரலாறு அவனை வரவுவைத்திருக்கிறது.
சந்தையில் ஆடு மாடுகளைப் போல விலைக்கு வாங்கப்பட்டு உயிர்போகும்வரை முரட்டுத்தனமாக உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அடிமைகள் கலகம் செய்த வரலாற்றுக் காலப் பகுதியின் உணர்ச்சிகரமான உந்துசக்தியாக அமைந்த ஸ்பார்டகஸ் அடிமை, கிளாடியேட்டர். பிரபு குலத்தினர், உயர்குடியினர் கூடியுள்ள அரங்கில் ஓர் அடிமை மற்றோர் அடிமையோடு விலங்குகளைப் போல மோதிச் சண்டையிட