ம. இலெ. தங்கப்பாவுக்கு விருது
வேலூர் இலக்கியப் பேரவையும் ஆழி பதிப்பகமும் இணைந்து இரண்டாம் ஆண்டாக வேலூர் கோட்டை மைதானத்தில் 8.9.11 முதல் 18.9.11 வரை புத்தகக் கண்காட்சியை நடத்தின. அதையொட்டி இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் வேலூர் இலக்கியப் பேரவை விருது ஒன்றை வழங்குகிறது. தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் படைப்பாளர், அறிஞர்களில் ஒருவரைத் தேர்வுசெய்து அவருக்கு ரூபாய் ஐம்பதாயிரம் வழங்குவது இவ்விருதாகும்.
முதல் ஆண்டாகிய இவ்வாண்டு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா ஆவார். அழகியபெரியவன், செ. ச. செந்தில்நாதன், ச. சிவகுமார், அருள் ஜோதி அரசன் ஆகியோர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். நெல்லை மாவட்டத்தில் பிறந்த ம. இலெ. தங்கப்பா புதுச்சேரி அரசு கலைக்கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தற்போது புதுச்சேரிய