அகவிழி திறந்து
முள்ளி வாய்க்கால்
2008ஆம் ஆண்டு ஜூலை முதல் வாரம் கவிஞர் தீபச்செல்வனைத் தொடர்புகொண்டேன். அந்த வாரம்
தி இந்துவில் என். ராம் இலங்கை வவுனியாவில் இருக்கும் முகாம்களுக்குச் சென்றுவிட்டு
அதை uplifting experience (மேன்மையான அனுபவம்) என்று
எழுதியிருந்தார். எனக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது இந்தக் கட்டுரை. தி இந்துவின்
இலங்கைத் தமிழர் தொடர்பான 20 ஆண்டுக்கால மன்னிக்க முடியாத அநீதிகளின் முத்தாய்ப்பு
இந்தப் பதிவு. இலங்கை முகாம்களின் நிலை பற்றிய அசலான பதிவைக் காலச்சுவடில் வெளியிட
நினைத்தேன். தீபனிடம் ‘முகாமிலிருக்கும் ஒருவரிடமிருந்து முகாம் நிலை பற்றிய பதிவைப்
பெற முடியுமா?’ என்றும் ‘கருணாகரன் இப்போது எங்கே இருக்கிறார்?’ என்றும் கேட்டேன்.
‘கருணாகரனிடம் கேட்கலாம், அவர் ஒரு முகாமில்தான் இருக்கி