“வகுப்புவாத வன்முறையைத் தடுக்கப் புதிய சட்டங்கள் அவசியமல்ல”
நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படவிருக்கும் வகுப்புவாத வன்முறைத் தடுப்புச் சட்ட மசோதாவின் பொதுவான சிறப்பம்சங்கள் என்ன?
பாதிக்கப்பட்டோருக்கான நீதி, அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு பற்றிய அட்டவணை இச்சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய அம்சம். மற்ற சட்டங்களிலும் இந்த அம்சம் உண்டு. ஆனால் வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு, மீண்டு வருவதற்கான உதவிகள் ஆகியவை பற்றி இதில் உள்ளதுபோல் தெளிவான வரையறை வேறு எந்தச் சட்டத்திலும் இல்லை. இதுவரை பரிந்துரையாக மட்டுமே இருந்துவந்த இவ்விழப்பீட்டு முறை இப்போது அதிகாரபூர்வமான சட்டமாகப்போகிறது.
வகுப்புவாத வன்முறைக்குப் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமை தவறல் காரணமாக இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியது பற்றி இச் ச