நவீன இலக்கியப் போக்குகளின் அறிமுகம்
ஆகஸ்ட் 13, 14 நாட்களில் சேலம் தமிழ்ச் சங்கம் நடத்திய ‘கவிஞர் மீரா நினைவு - நவீன இலக்கிய அரங்கம்’ தமிழ் இலக்கியப் பரப்பில் புதியதொரு மைல்கல்லாக அமைந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாணவ மாணவியர் பெருமளவில் கலந்துகொண்ட நிகழ்ச்சியாகவும் அமைந்தது. கல்விப் புலத்தில் தம் கவிதைகள் மூலமாக நன்கு அறியப்பட்டவரும் நூல் வெளியீட்டில் புதுமைகளைச் செய்தவருமான மீராவின் நினைவைப் போற்றும் விதத்தில் அவர் பெயரால் அமைந்த அரங்கில் ஏறக்குறைய நானூற்றுக்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்ச்சி இது.
பொதுவாக அரசியல் பிரமுகர்களை இலக்கியவாதிகளென முன்வைக்கும் தமிழ்ச் சங்கங்களின் பாரம்பரியத்தை விட்டுப் பெருமளவுக்கு விலகி, புதியதொரு திசையில் சேலம் தமிழ்ச் சங்கம் அடியெடுத்து முன்னேறிவருவதற்குக் காரணம் அதன் செயலர் க. வை. பழனிசாம