கிராம வாழ்வே படைப்பின் ஆதாரம்
ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், கடவு ஆகியவற்றுடன் காலச்சுவடு மாத இதழ் இணைந்து நடத்தும் அற்றைத் திங்கள் நிகழ்வில் மாதந்தோறும் சிறப்புரையாற்றும் ஆளுமைகளின் வரிசையில் ஆகஸ்ட் மாதம் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மதுரை இந்திய மருத்துவக் கழக அரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களோடு கவிஞர்கள் சமயவேல், கலாப்ரியா, எழுத்தாளர்கள் சுரேஷ் குமார இந்திரஜித், சோ. தர்மன், கல்லூரி பேராசியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஸ்டாலின் ராஜாங்கம் வரவேற்புரையுடன் பா. செயப்பிரகாசத்தைப் பற்றிய அறிமுக உரையையும் நிகழ்த்தினார்.
பா. செயப்பிரகாசம் தன் உரையை மூன்று பகுதிகளாக முன்வைத்தார். முதலில் தன் பால்ய கால அனுபவம். இந்தி எதிர்ப்புக் காலத்தில் தனது பங்கு. இறுதியாகத் தமிழ்த் தேசிய எழுச்சி பற்றிய தனது