பரீக்ஷாவின் இரு நாடகங்கள்
ஜூன் 3, 4, 5இல் காலச்சுவடு நடத்திய சுந்தர ராமசாமியின் 80ஆம் ஆண்டு நினைவுவிழாக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கவிதை வாசிப்பு, விமர்சனங்கள், நாடகங்கள் ஆகியன அதன் நிகழ்வுகள். சுந்தர ராமசாமியின் ‘எந்திரத் துடைப்பான்’, ‘பல்லக்குத் தூக்கிகள்’ ஆகிய சிறுகதைகளைப் பரீக்ஷா மேடையேற்றியது.
பரீக்ஷா நாடகக்குழு சென்னையை மையமாகக் கொண்டு 33 வருடங்களாக இயங்கிவரும் நவீன நாடகக்குழு. இதன் இயக்குநர் ஞாநி பத்திரிகையாளர், நாடக இயக்குநர். ‘எந்திரத் துடைப்பான்’ நாடகம் கருத்தரங்கின் முதல்நாள் பிற்பகல் 2:45 மணியளவில் மேடையேற்றம் செய்யப்பட்டது.
சாமியாருக்கும் எந்திரத்துடைப்பான்விற்கும் பிரதிநிதிக்குமிடையில் நடை பெறும் காட்சிகளே இந்நாடகம். அரங்கத்தில் ஒரு நாற்காலி மட்டுமே காணப்பட்டது. முதல் காட்சியில் நாற்காலியில் சாமியார் அமர்ந்திருக்க எந்திரத் துடைப்பான் விற்கும் பிரதிநிதி, அதை விற்க முற்படுகையில் இருவருக்குமிடையில் ஏற்படும் லௌகீக வாழ்வுசார்ந்த விவாதங்கள் எதார்த்தத்தின் மீது இவ்வுலகம் கட்டியெழுப்பிய புனைவுகளையும் போலித்தனங்களை