தாமரை மொட்டுப் போல
பத்து அல்லது பதினோரு வயதிற்குள்ளேயே பூக்களும் பூக்களை விற்பவர்களும் எனக்கு அறிமுகம். சைவம் சார்ந்த நடுத்தரக் குடும்பத்தில் ஆணிவேராக உள்ள நம்பிக்கையால் கடவுளின் பிரதிபிம்பங்களும் அவற்றுக்கான வழிபாடுகளும் கடவுள் மறுப்பும்கூட இயல்பானதே. அடர்சிவப்பில் செம் பருத்தியும் தளுதளுக்கும் மஞ்சள் நிறத்தில் தங்கரளிப்பூக்களும் (தங்கரளிப்பூக்களில் இன்றும் குழந்தைகள் தேன் உறிஞ்சுகிறார்கள்) எளிய சுபாவமுள்ள சங்குப் புஷ்பங்களும் மௌனம் மிக்க நந்தியாவட்டைப் பூக்களுமே என் முதற்பூக்கள். மாலைநேரத்தில் விளக்குச்சரம் கொண்டுவரும் பெண்ணே நான் அறிந்த முதல் பூ வியாபாரி. (என் அம்மாவின் சிநேகிதிகளின் வட்டத்தில் இவளுக்கென்று தனியிடம் உண்டு.)
மார்கழிமாதம் வாசலில் சாணத்தில் செருகிவைக்கும் பூக்கள் பரவசம். அதற்காகவே பள்ளி நாட்களில் மதியம் சாப்பிட்ட பிறகு பாத்திரத்தை நன்றாகக