கல்வியின் பரிணாமங்கள்
சிறப்புப் பகுதி
கல்வியின் பரிணாமங்கள்
கே. நிலாமுதீன்
சமூகம் இத்தனை பரிமாணங்களைக் கடந்து வந்ததும் அதனைக் கடத்திச் சென்றதும் கல்வி என்ற வலுவான ஆயுதத்தாலாகும். மற்ற உயிர்களிலிருந்து மனிதன் மாறுபட காரணம் மனிதனின் பகுத்தறிவு. அந்தப் பகுத்தறிவை அவன் பெறவும் பெற்றதை அடுத்தவருக்கும் அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச் செல்லவுமான அற்புதமான ஆயுதம் கல்வி.
கல்வி வாய்ப்பைச் சிலர் மட்டுமே அடைந்ததும் அதனால் பொருள், செல்வாக்கு, அதிகாரம் போன்றவற்றை அவர்கள் பெற்றதும் பலர்