பூனையின் தவம்
“ஹலோ வணக்கம் சார்…” அவள் செல்போனில் டாக்டரிடம் பேசத் தொடங்கினாள்.
“யாரும்மா? சொல்லுங்கம்மா” டாக்டர் தன் கழுத்தில் கிடந்த ஸ்டெதாஸ்கோப்பினை ஒருமுறை சரிசெய்தபடி பதில் சொன்னார்.
“நான் நஸ்ரின் பேசுறேன், சார்… டூ வீக் முன்னாடி வொங்கள்ட்டெ ட்ரீட்மெண்டுக்கு வந்திருந்தேன்…சுயம்புலிங்கம் சார் வொங்கள்ட்டெ வரச்சொல்லி ரெகமண்ட் பண்ணியிருந்தாங்கள்லா..” தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ளப் பீடிகை போட்டாள் நஸ்ரின். டாக்டர் உட்கார்ந்திருக்கும் அறையில் சுவரில் மாட்டப்பட்டிருந்த கெய்த்தான் பேன், சுழன்றடிக்கும் காற்றினை அவர்மீது விரித்துப் போட்டது. அப்போது மேசையிலிருந்த குறிப்பேடு காற்றில் படபடத்தது. அவர் நஸ்ரினை நினைவுப் பரப்பிற்குள் கொண்டுவர முயன்று பார்த்தார்; முடியவில்லை.
“ஆமாம்மா. அவரு நெறைய பேரெ அனுப்புவாரு. சரியா