கொலையும் களப்பலிகளும் மறுமலர்ச்சியின் பூபாளம்
ஈரான் நாட்டின் குர்திஸ்தான் மாகாணத்திலுள்ள சஹிஸ் நகரிலிருந்து அந்நாட்டின் தலைநகரான தெஹ்ரானில் வசிக்கும் உறவினரைப் பார்க்க மாஷா அமினி என்ற பெண் சென்றார். அது ஒரு நாட்டின் தலையெழுத்தைக் கீறிப் பார்க்கின்ற எழுச்சியாக மாறிப்போனது.
பல நாடுகளைப் புரட்டிப்போடும் நிகழ்ச்சிகளாக அல்லது அந்தந்த நாடுகளின் யதேச்சாதிகாரிகளை விரட்டியடிக்கும் நிகழ்ச்சிகளாக மிகமிகச் சாதாரணமான சம்பவங்கள்தாம் அமைந்துள்ளன. அதைப்போன்ற ஒரு சம்பவம்தான் மாஷா அமினியுடையதும். உறவினரைப் பார்க்கப் போகும் தான் சிறிதுநேரத்தில் நடைப்பிணமாகிவிடுவோம் என்று அவர் நினைத்திருக்க மாட்டார். அடுத்த இரண்டு நாட்களில் தான் செத்துப்போய்விடுவோமென்றும் எண்ணியிருக்க மாட்டார்.
மாஷா அமினி என்ற பெண் தனியாகச் செல்லவில்லை; தன் குடும்பத்தினருடன் செல்கிறார். அவர்களிலும் பெண்கள் உண்டு. அவர் ஹிஜாப் அணிந்திருந்தார். அது சரியாக அணியப்படவில்லையென்று அவருடன் சென்ற பெண்களுக்குத் தெரிந்திருக்கவில்லை. ஆனால் கலாச்சாரக் காவலர்களுக்குத் தெரிந்துவிடுகிறது. கலாச்சாரக் காவலர்களாக வலம் வருவோர் ஆணாதிக்கவாதிகளாய் இருப்பது மரபு. எப்போதும், எல்ல