சோழர் காலத் தமிழர் பெருமிதமும் ‘கங்காபுரம்’ நாவலும்
இலக்கியம், திரைப்படம், ஊடகம் என எல்லாவற்றிலும் கலவையான தமிழே ஓடுகிறது. பிறமொழி கலவாத தூய தமிழில், பொருத்தமான சொல்லாட்சியோடு பேசுவோரும் எழுதுவோரும் அரிதாகக் காணப்படுகிற தற்காலச் சூழலில் நல்ல தமிழ் நடையில் எழுதப்பட்ட நூல்களைப் படிக்கிறபோது மகிழ்ச்சி ஏற்படுகிறது. வெண்ணிலா எழுதிய ‘கங்காபுரம்’ நாவல் அப்படிப்பட்ட நூல்தான். முப்பது நாற்பதுகளில் இதிகாச, புராண நாடகங்களில் நடித்த நடிகர்கள் திரைப்படத்திலும் தொடர்ந்தபோது அவர்கள் பேசிய வசனங்கள் வேறொரு பண்பாட்டுப் புலத்தை நமக்குக் காண்பித்துக்கொண்டிருந்தன. கொஞ்சம் விமர்சனம் இருந்தாலும் திராவிட இயக்க எழுத்தாளர்களின் மொழிநடையும் அந்தக் காலத்திற்குத் தேவையாகத்தான் இருந்தது. இப்போது அவையெல்லாம் மக்கி மறைந்துவிடுமோ என்ற அச்சம் எழுகிறது. அதியமான் நெடுமான் அஞ்சி இறந்தபோது ஔவையார் பாடிய மாதிரி,
ஆசாகு எந்தை யாண்டு உளன் கொல்லோ?
இனிப்பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று
ஈகுநரும் இல்லை
இனி நல்ல தமிழ் பேசுபவருமில்லை, பேசுவதைக் கேட்பவருமில்லை என்ற நிலைமை வந்துவிடுமோ? நல்ல தமிழில் ஒரு வரலாற்று நாவலை வெண்ண