என்றென்றும் வாசகர்
கோவை, ராஜவீதியில் உள்ள ‘விஜயா’ பதிப்பகத்தைத் தேடிச் சென்றது 1984 ஆம் ஆண்டு. கல்லூரி இரண்டாம் ஆண்டு மாணவன் நான். கணையாழி, தீபம் போன்ற இதழ்களையும் சில புத்தகங்களையும் வாங்கியபோது வேலாயுதம் என்னைப்பற்றி விசாரித்தார். புதிய சில புத்தகங்களை எடுத்துக் காட்டி அவற்றைக் குறித்து உற்சாகத்துடன் உரையாடினார். விற்பனையாளரைப்போல அல்லாமல் புத்தகங்களைப் பற்றியும் எழுத்தைக் குறித்தும் ஆர்வத்துடன் பேசியது மிகுந்த வியப்பைத் தந்தது.
35 ஆண்டுகளுக்குப் பின்னும் அவரிடம் அந்த உற்சாகம் குறையவில்லை. இன்றும் ஒரு புதிய நூல் வெளியாகும்போது, உடனடியாக அதை வாசிப்பதிலும் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வதிலும் அவருக்கு அத்தனை மகிழ்ச்சி. ‘நான் பதிப்ப