நோபல் பரிசு: அன்னி எர்னோ ஆபாச எழுத்தாளரா?
அன்னி எர்னோ (Annie Ernaux) தன் எண்பத்திரண்டாவது வயதில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெறுகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் இப்பரிசைப் பெறும் பதினாறாவது எழுத்தாளர் இவர். அவ்விலக்கியத்தில் இப்பரிசைப் பெறும் முதல் பெண் எழுத்தாளர் இவரே.
பரிசு அறிவித்த சில நாட்களிலேயே பிரபல பிரெஞ்சுப் பத்திரிகையொன்று தன் தலையங்கத்தில், அன்னி எர்னோவின் எழுத்துக்களை ஆபாசம் என்று கருதிப் படிக்காமல் விட்டுவிடாதீர்கள் என்று தன் வாசகர்களுக்கு அறிவுறுத்தியது.
ஆபாசம்
அன்னி எர்னோ எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே அவர்மீது ‘அந்தரங்கத்தை அம்பலப்படுத்துபவர்’ என்ற முத்திரை குத்தப்பட்டு வந்திருக்கிறது.
அவர் எழுதிய சுமார் இருபது நூல்களில் ஒருசிலவற்றில் ஆபாசம் நிறைந்திருப்பதை மறுக்க இயலாது.
‘சாதாரண மோகம்’ (Passion Simple, 1992 ஆ. Si