இது ஷி--ஜிங்பிங்கின் காலம்!
அக்டோபர் 16, 2022. பெய்ஜிங். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது பேராயம் (காங்கிரஸ்). ஒரு வாரக் கூட்டத்தின் முதல் நாள். சீன அதிபர் ஷி ஜிங்பிங் உரையாற்றினார். 2,296 பேராளர்கள் வைத்த கண் எடுக்காமல் அந்த உரையைக் கேட்டனர். பேராளர்களில் கட்சியின் மூத்த பொறுப்பாளர்கள் இருந்தனர். ராணுவத்தின் உயரதிகாரிகள் இருந்தனர். அரசு அலுவலர்கள் இருந்தனர்.
சீனாவின் பல நகரங்கள் பெருந்தொற்றால் இப்போதும் முடக்கப்பட்டிருக்கின்றன. இந்தக் கூட்டத்தில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் அறிவிப்பு வரும் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது. இல்லை என்றார் ஷி. அவர் தனது தொடக்க உரையை நிதானமாக வாசித்தார். ஆனால் அதில் அழுத்தம் இருந்தது. தைவானைக் கைப்பற்றப் படையெடுப்பு தேவையென்றால் சீனா தயங்காது என்றார். ஹாங்காங்கில் போராட்டங்கள் முடிந்துவிட்டன என்று அறிவித்தார். இரண்டாண்டுகளாக நீடிக்கும் இந்தியாவுடனான எல்லைப் பிரச்சினையை ஷி பேசவில்லை. ஆனால் பேராளர்களில் ஒருவராக முன் வரிசையில் அமர்ந்திருந்தார் ராணுவத் தளபதி கீ பாபோ. ஜூன் 15, 2020 அன்று நடந்த கால்வான் யுத்தத்தில் இந்தியத் துருப்புகளோட