நீங்கள் எந்தப் பக்கம் போகிறீர்கள்-?
ஓவியங்கள்: றஷ்மி
“அப்பாவைக் கண்டீர்களா?”
-20 பாகைக் குளிருக்குள் வீட்டு உடுப்புடன் வெளியில் வந்து நின்றதில் பீற்றரின் பதைப்புத் தெரிந்தது. வெளியில் பனி கொட்டித் தெருவும் வீடும் மூடிக் கிடந்தன.
“முதலில் நீ உடையை அணிந்து வா. குளிரில் உறைந்து போவாய். நான் பார்க்கிறேன்.”
நான் காலையில் எழுந்து எனது பாதையில் குவிந்திருந்த பனியை அகற்றிக்கொண்டு நின்றேன். காரை வெளியில் எடுக்க வேண்டுமெனில் பனியைப் பாதையிலிருந்து அகற்ற வேண்டும். பனிப்பொழிவு ஓய்ந்திருந்தது. யாரும் தெருவில் நடந்ததற்கான கால் தடம் இல்லை. சாம் எப்போதிலிருந்து காணாமல் போயிருப்பார்? நேற்றுப் பின்னிரவிலிருந்து பனி பொழியத் தொடங்கியிருந்தது. அவர் என்ன உடையோடு இருந்தார். வீட்டு உடையோடு வெளியில் போயிருந்தால் பத்து நிமிடத்துக்கும் மேல் வெளியில் தாக்குப் பிடிப்பது கடினம