அடையாளச் சிக்கல்: ‘இட’மாக மாறும் ‘நிலம்’
‘‘This Place”
இந்த ஆண்டின் ரொரன்றோ சர்வதேசத் திரைப்பட விழாவில் மோகாக் முதல் குடிகளை மையப்படுத்திய ‘This Place’ படம் திரையிடப்பட்டது. ஒவ்வொரு வருட விழாவிலும் கனடாவின் முதல் குடிகளின் படைப்புக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுவருகிறது. குறிப்பாக, கடந்த பலவருடங்களாக பிரித்தானிய, பிரெஞ்ச் காலனித்துவ ஆட்சியின் Residential school system என்னும் ஏற்பாட்டினால் முதல் குடிகளின் மொழி, விழுமியங்கள், கலாச்சாரம் ஆகியவை அழிக்கப்பட்டன. கடந்த வருடங்களில் பல புதைகுழிகளும் அதற்குள் பல முதல்குடி மாணவர்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. அம்மக்களிடம் கனடிய அரசும் கத்தோலிக்க மதத் தலைமைப் பீடமும் மன்னிப்புக் கேட்டன. அந்தக் குடிகள் இன்றும் தொடர்ச்சியாக உள, உடல் ரீதியான பாதிப்புக்களுக்கு ஆளாகியுள்ளனர். தங்களுக்கான உணவு, உடை, உறையுள் போன்