தேசிய நாடகப் பள்ளி பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பத்தாவது தேசிய நாடக விழாவினை ஜனவரி 3 இல் தொடங்கி 20வரை தில்லியிலும் ஜனவரி 6இல் தொடங்கி 17வரை மும்பையிலும் நடத்தியது. தில்லியில் ஆறு அரங்குகளில் 76 நாடகங்களையும் மும்பையில் நான்கு அரங்குகளில் 26 நாடகங்களையும் நிகழ்த்தியது. கடந்த ஐம்ப தாண்டுகளில் எண்ணற்ற நடிகர்கள், இயக்குநர்கள், வடிவமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கி, நவீன நாடகத்தை இயக்கமாக்கியதைப் பதிவுசெய்யும் வகையில் நடந்த இந்த விழாவில் தேசிய நாடகப் பள்ளி மாணவர்களின் நாடகப் படைப்புகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது பங்களாதேஷ், நேபாளம், மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் முன்னாள் மாணவர்கள் படைப்புகளோடு வந்திருந்தனர். இவ்வாறு 18 நாடகங்கள் உலகம் முழுவதிலிருந்தும் வந்திருந்தன.
<img align="right" border="0" height="375" hspace="5" class="img-responsive" class="img-thumbnail img-responsive" src="/media/magazines/f4ad85be-b276-45ab-ac03-c298821558a6/content_images/issue-102/images