தலித் இலக்கியம் மானுட விடுதலைக்கான கலகம்
இதழ் 101இல் இடம்பெற்ற 'தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியமா' கட்டுரைக்கான எதிர்வினை.
கலை, இலக்கியங்களுக்கான அழகியல், கலைத் தரம், கலை நேர்த்தி, பொது மொழி போன்ற மதிப்பீடுகள் கல்வி வாய்க்கப்பெற்ற மேன்மக்களால் வளர்க்கப்பட்டவை. அனைத்துக் கலை இலக்கியங்களுக்கும் பொதுவான மதிப்பீடு இருக்க முடியாது. எல்லோரும் ஏற்றுக்கொள்கிற அழகியல் கோட்பாடு என எதுவும் இல்லை. அழகியலில் வகைமைகள் உண்டேயன்றி, வரையறுக்கப்பட்ட அழகியல் என்றெல்லாம் ஒன்றில்லை. ஒவ்வொரு கருத்தியலுக்கும் பொருத்தமான அழகியல் உண்டு. ஆனால், தமிழ்ச் சமூகத்துக்குள் ஆணையிலிருக்கும் வல்லாண்மைக் கருத்துகள், இலக்கிய வகைகள் அனைத்துக்கும் பொதுவான அழகியல் என வைப்பதன் மூலம் தமக்கான நிலை நிறுத்தலை உறுதிசெய்வதில் முனைப்புக் கொள்கின்றன. அடிமட்டங்களிலிருந்து கிளம்பிவரும் தலித்துகள், பழங்குடியினர், பெண்கள், அடிநிலை வர்க்கத்தினர் போன்றோருக்கான கலை, இலக்கிய வெளிப்பாடுகளுக்குத் தனித்த அழகியல்தான் உண்டு. பொது மொழி, பொது மதிப்பீடுகளுக்குள் அடங்காதன அவை.
இமையம் இந்தப் பொது மதிப்பீடுகளுக்குள்ளிருந்து எல்லாவற்றையும் பார்த்திருக்கிறார். "ஒரு படைப்பு