ஆண்டுதோறும் மே முதல் நவம்பர் வரை இந்தியப் பெருங்கடலின் வடபகுதியில் வெப்ப மண்டலப் பருவகாலப் புயல்கள் தோன்றுவது வழக்கம். இவ்வருடத்தின் முதல் புயல் "நர்கீஸ்".
இந்தக் கோரமான புயலுக்கு "நர்கீஸ்" (உருது மொழியில்) என அழகிய மென்மையான மலரின் பெயரை பாகிஸ்தான் ஏன் சூட்டியது என்ற காரணத்தை பாகிஸ்தான் மட்டுமே அறியும்.
நமது இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் "நர்கீஸ்" என்றவுடன் நினைவுக்குவருவது 1950களில் இந்தித் திரைப்பட உலகின் மகுடம் தாங்கிய பேரரசி 'நடிகை நர்கீஸ்'தான். நர்கீஸ் நடித்து அவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாது அரேபிய நாடுகளிலும் ரஷ்யாவிலும் மாபெரும் ரசிகர் படையைப் பெற்றுத்தந்த படம் மதர் இந்தியா. இந்தத் திரைப்படத்தில் நர்கீஸ் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல. அவற்றுள் கணவன் ஏர் உழ, ஒரு பக்கம் ஒரு காளை மாடும் மறுபக்கம் மனைவி "நர்கீஸ்" நுகத்தடி சுமந்துச