'தேவதை'களின் வாழ்வு
கால்களில் சலங்கை கட்டி வாத்தியக்காரர்களோடு இறப்பு வீடுகளுக்குச் சென்று ஒப்பாரி பாடும் லட்சுமியம்மாள். கேட்பாரற்றுக் கிடக்கும் பிணங்களை வண்டியில் ஏற்றித் தள்ளிக் கொண்டு சுடுகாட்டில் அடக்கஞ்செய்யும் கிருஷ்ணவேணி. கடலில் மீன் பிடித்துக்கொண்டு கடல்மீதான மீனவர்களின் உரிமையை நிலைநாட்டிப் பேசும் சேதுராக்கு. இந்த மூவரும் தான் லீனா மணிமேகலையின் தேவதைகள்.
உயிரியல் ரீதியாக ஆண் பெண் வேறுபாடும் சமூக ரீதியாக ஆண்மை - பெண்மை கற்பிதமும் கொண்ட இச்சமூகத்தில் வீட்டிலும் வெளியிலும் பெண்ணுக்கான பணிகளும் ஆணுக்கான பணிகளும் முற்றிலும் வேறானவை. கண்ணுக்குப் புலப்படாத புனைவு சார்ந்த இந்தக் கற்பிதங்கள் பெண்ணின் இயங்கு வெளியை ஆணிலும் சற்றுக் குறைவானதாகவே வரையறுத்திருக்கின்றன. இவ்வெளி பெண்சார்ந்த¤ருக்கும் சமூகம், மரபு, நம்பிக்கைகள் இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது.
எழ