இரு இந்திய நாவல்கள்
வங்காளிகள் மட்டுமல்லாமல் வட இந்தியர் எல்லாருமே டகோர் என்றுதான் அழைக்கிறார்கள். தமிழில் அது தாகூர். அது எப்படி இவ்வாறு ஒலி மாற்றம் பெற்றது? மாற்றத்துடன் முடியாமல் அச்சொல்லை வைத்து ஒரு கேலி வாக்கியமும் இருக்கிறது. தாடி வைத்தவரெல்லாம் தாகூர் அல்ல.
டகோர் தாகூர் ஆனது மட்டுமல்ல. தமிழில் அவர் ரவீந்திரநாத். ஆனால், அவருடைய ஆங்கிலக் கையப்பமே ரபீந்திரநாத் என்றுதான் இருக்கிறது. மிகவும் அழகான, நேர்த்தியான கையெழுத்து.
ரவீந்திரநாத் இயல், இசை, நாடகம் எல்லாவற்றையும் தேர்ந்த கலைஞன் போலக் கையாண்டார். கலைஞனுக்குச் சமூகக் கடமைகளும் உண்டு என்ற முறையில் ஒரு மாறுபட்ட கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். மனிதனுடைய அறிவின் எல்லைகள் அவனுடைய மொழி, நாடோடு கட்டுப்படுத்தப்படக் கூடாது என்றும் செயல்பட்டார். வெகுசன இயக்கங்களில் மதச் சின்னங்கள் நன்மை பயக்காது என்று நம்பினார். சமூக