கலகம், புரட்டிப் போடுதல், தலித் மொழியில் எழுதுதல் என்றெல்லாம் பேசப்பட்ட பரபரப்பு, தலித் இலக்கியத்தைச் சரியான அர்த்தத்தில் உருவாக்காமல் திரும்பவும் இழிநிலையைப் பேசும் வடிவத்தையே பரிந்துரைத்துவிட்டது என்று இமையம் சொல்லும் கருத்துகள் விவாதிக்கப்பட வேண்டியவை. அதே போல் வெகுமக்கள் ஊடகத் தளத்திலும் சிறப்பு மலர்களிலும் தலித் எழுத்தாளர்களுக்காக இடத்தை ஒதுக்கி அவர்களைக் கொண்டே அப்பக்கங்களை நிரப்புவது என்ற சலுகை, ஒருவிதத்தில் தீண்டாமைதான் என அவர் வாதிடுவது ஏற்கத்தக்க ஒன்றுதான்.
எதுவுமே கிடைக்காமல் போன ஒரு கூட்டத்திற்கு, ஒதுக்கீடு ஆறுதல் அளிக்கும் கொழுகொம்பு; அதைப் பற்றிக்கொண்டு மேலே வரலாம். ஆனால், அதையே விடுதலைக்கான, தீண்டாமையை ஒழிப்பதற்கான, சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான அருமருந்து என நம்புவது பேதைமையே. இமையமும் இத்தகைய கருத்துத் தளத்தில் இருந்தே, "இந்திய - தமிழ்ச் சமூகம், உயர்வுதாழ்வு என்ற படிநிலைகள் கொண்ட சமூகமாக இருக்கிறது என்பதை தலித் இலக்கியம் மட்டுமே பேசவில்லை. பழங்கால இலக்கியங்களும் பேசியுள்ளன" என்பதற்கான மேற் கோள்களைக் காட்டி விளக்கியுள்ளார். அதே நேரத்தில் இமையம் தனது கட்