புகழ்பெற்ற காந்தியவாதியும் சமூகப் பணியாளருமான நிர்மலா தேஷ்பாண்டே தனது 79வது வயதில் கடந்த மே மாதம் முதல் தேதி தில்லியில் காலமானார். முந்தையதினம் தன்பாத் நகரில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிய அவருக்கு வாயுத்தொல்லையும்லேசான காய்ச்சலும் இருந்துள்ளது. வியாழன் அதிகாலை அவரின் உதவியாளர் அவர் அறைக்குச் சென்றபோது 'எனக்கு ஒன்றுமில்லை; நான் பிரார்த்தனை செய்கிறேன்' என்று சொன்ன ஒரு மணி நேரத்தில் சுமார் 4 மணியளவில் அவர் உயிர் பிரிந்துள்ளது.
1929 அக்டோபர் 27ஆம் நாள் மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிறந்த நிர்மலாவின் தந்தை பிரபல மராத்தி எழுத்தாளர் ஒய்.வி. தேன்பாண்டே. பத்தொன்பது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் தொடங்கிய அவரின் சமூகப் பொது வாழ்வு சுமார் 60 ஆண்டுகள் இந்தியாவின் மதச்சார்பின்மை மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான நீடித்த இயக்கமாக