நான்கு மணிக் காட்சிக்கென்று அரங்கினுள் முதலில் அனுமதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். நடுப்பகுதியில் வசதியான இருக்கை ஒன்றைப் பிடிக்கும் நோக்குடன் விரைகின்றேன். பார்வையாளர்களுக்கான இருக்கைகளின் முதல் வரிசையை அண்டி, மேடையின் முற்பகுதியில் குறுக்காகக் குரும்பசிட்டி இராசரத்தினம் நிற்கின்றார். புன்முறுவலுடன் அவரைக் கடந்து செல்கிறேன். முகமனுக்கு ஒரு சிறு பதில் முறுவல் தன்னிலும் அவரிடமிருந்து கிடைக்காத ஏமாற்றத்துடன் படியேறிச்சென்று இருக்கையன்றில் அமர்ந்துகொண்டேன்.
மேடையில் கனடிய தேசியக் கொடி காணப்படுகிறது. நயாகரா நீர்வீழ்ச்சி, ஒன்ராறியோ கடலேரி, சீஎன் கோபுரம் போன்ற சின்னங்கள் உட்பட, கனடாவின் அழகினைச் சித்திரிக்கும் காட்சிப் படங்கள் பல, திரையில் மாறி மாறித் தோன்றி மறைந்துகொண்டிருந்தன. கனடிய இயற்கைச் சூழலை மனத்தில் மீள் வலியுறுத்திக