பருத்தி
மனித சமூகத்தின் ஆடைத் தேவைக்கு அடிப்படையான தாவரம் பருத்தி. தாவரவியலாளர் gossypium linn என்று இதைக் குறிப்பிடுவர். வறட்சியைத் தாங்கும் தன்மையது என்பதால் பெரும்பாலும் வளமான வயல்களில் இதைப் பயிரிடுவதில்லை. கரிசல் நிலமே இதற்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. செம்மண் நிலங்களிலும் இதைப் பயிரிடுவதுண்டு. குத்துச் செடியாக இது வளரும். தேன் சுரப்பிகள் கொண்ட இதன் பூக்கள் மஞ்சள் மற்றும் வெளிரிய கருஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும். இதன் காய் முற்றிய பிறகு அதிலிருந்து பஞ்சை எடுக்கலாம். இவ்வேலையைத்தான் 'பருத்தி எடுத்தல்' என்பர்.
கொடிபோல் படரும் ஒரு வகைப் பருத்தியை வீடுகளில் வளர்ப்பதுண்டு. இதன் காய்கள் சிறியதாக இருக்கும். விளக்கெரிக்கும் திரியினைத் திரிக்க வீடுகளில் இதனைப் பயன்படுத்துவர். எண்ணெய் விளக்குகளின் மறைவையட்டி இச்செடியு